PUBLISHED ON : செப் 13, 2013

உயிரினங்களைப் பொறுத்தவரை பற்களின் பயன்பாட்டைப் பொறுத்தே அவை பல்துலக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை நிர்ணயிக்க முடியும்.
பாம்புகளைப் பொறுத்தவரை அதன் இரு பற்களும் மெல்லியதாக, கூர்மையாக அமைந்துள்ளன. அவை உணவு மற்றும் எதிரிகளின் உடலில் விஷத்தைப் பாய்ச்சுவதற் காக மட்டுமே பற்களைப் பயன்படுத்துகின்றன. உணவை பற்களால் மென்று உண்ணாமல் விழுங்கி விடுகின்றன.
மாமிச உண்ணிகளான பூனை, புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் பற்கள், அவற்றின் உணவினைத் துண்டாக்கவும், கிழிக்கவும் மட்டுமே பயன்படு கின்றன. இவ்வகைப் பிராணிகளுக்கு கோரைப் பற்கள் மட்டுமே பெரிதாகக் காணப்படுகின்றன.
ஆடு, மாடு, மான் போன்ற தாவர உண்ணிகள் புல், வைக்கோல், இலை போன்றவற்றை நன்கு அரைத்து பசை போல உண்ணுகின்றன. அவ்வகை உணவிலுள்ள செல்லுலோஸ் அவ்விலங்கு களின் பற்களைச் சுத்தம் செய்து விடுவதால் அவை பல்துலக்க வேண்டிய அவசியம் இல்லை.
மனிதனைப் பொறுத்தவரை அனைத் துண்ணியாக விளங்குகிறான். மனிதனது பற்கள் தாவரங்களை உண்ணவும், மாமிசங் களை உண்ணவும் பயன்படு கின்றன. எனவே, மாமிச உண்ணி களைப் போன்ற கோரைப் பற்களோடு, தாவர உண்ணி களைப் போன்ற பிற பற்களும் ஒரே அளவில் உள்ளன.
மனிதனது நவீன உணவிலுள்ள கார்போ ஹைட்ரேட் சீக்கிரமே புளிக்கும் தன்மை கொண்டதால், அது பல் ஈறுகளைப் பாதிக்கிறது. பல் இடுக்குகளில் போய் உணவுத்துகள் தங்கி விடுகின்றன. எனவே, பற்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும். பற்களின் வேர், ஈறுகளில் நோய்கள் தாக்காத வண்ணமும் பல்துலக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
