PUBLISHED ON : செப் 27, 2013

அ நிறம் | அளவு
மலர்களின் மணம் எப்படி வருகிறது?
மலர்களுக்கு வாசனை அதன் இதழ்களின் இருக்கும் சில எண்ணெய்ச் சத்துக்களில் இருந்து வருகிறது. செடி அல்லது மரம் வளரும் போது இந்த எண்ணெய் பொருட்கள் உருவாகிறது. இந்த எண்ணெய்ப் பொருட்கள் சில சமயங்களில் தாமாகவே எளிமை அடைந்து, மனிதனின் வியர்வை போலச் சுலபமாக ஆவியாகின்றன. அப்போது மலர்களில் வாசனை தோன்றுகிறது.
ஒரு மலரின் வாசனை அதன் ஆதார எண்ணெய்களின் கலவையைப் பொறுத்திருக்கிறது. இந்த எண்ணெய்ப் பொருட்கள் மலரில் மட்டும் இல்லாமல் இலை, வேர்கள், விதைகளிலும் காணப் படுகின்றன. யூகலிப்டஸ் இலையிலும், பாதாம் விதையிலும் வாசனை வருவதற்கும் இதுதான் காரணம்.
