தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : மே 02, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெண்குஷ்டம் என்றால் என்ன தெரியுமா?

வெண்குஷ்டம் என்று நாம் அழைக்கும் இந்நோய் மருத்துவத்தில், 'அல்பினிசம்' என்று அழைக்கப்படுகிறது. அல்பஸ் என்றால் லத்தீனில் வெள்ளை என்று பொருள்.

இந்நோய் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், செடி கொடிகளையும் பிடிக்கும். இது பொதுவாக ஒரு பரம்பரை நோயாகவே கருதப்படுகிறது. மரபணுக் கோளாறால் உண்டாகும் இந்நோய் உள்ளவர்களின் உடலில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு, கறுப்பு போன்ற நிறமிப் பொருள் இல்லாமல் போய் விடும். எனவே, இந்நோய் உள்ளவர்களின் உடல் வெள்ளையாக மாறிவிடுகிறது. தலைமுடியும் வெள்ளையாகவே மாறிவிடும். இந்நோய் பரம்பரை நோயாகவே கண்டறியப்பட்டுள்ளது.

சிலருக்கு உடலில் வெண்குஷ்டம் வெறும் புள்ளிகளாகத் தோற்றமளிக்கின்றன. சிலருக்கு ஆங்காங்கே திட்டுத்திட்டாகவோ, இன்னும் சிலருக்கு உடல் முழுவதும் வெள்ளையாகத் தோற்றமளிக்கின்றன.

பொதுவாக நமது உடலி லுள்ள நிறமிப் பொருள் ஒளியிலிருந்து நமது உடலைக் காக்கும் கவசம் போலவே செயல்படுகிறது.

வெண்குஷ்டம் பாதித்தவர்களின் உடலில் நிறமிப் பொருட்கள் இல்லாததால், கண்களில் கருவிழி கூட இளஞ்சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கிறது. கண் ரத்தக் குழாய்களிலுள்ள ரத்தத்தின் சிவப்பு நிறமே அது. ஒளியைத் தாங்கும் நிறமிப் பொருட்கள் உடலில் இல்லாததால், இந்நோயாளிகளுக்கு சூரிய ஒளி மட்டுமின்றி அதிகப் பிரகாசமான ஒளியைக் கூட பார்க்கும் ஆற்றல் இருப்பதில்லை. கண்கள் கூசும். எனவே கண்களைச் சுருக்கிக் கொண்டே அவர்கள் பார்க்க முடியும்.

உலக மக்கள் தொகையில் 20ஆயிரம் பேரில் ஒருவருக்கு முழுமையான வெண்குஷ்ட பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிவியல் கூறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us