PUBLISHED ON : மே 02, 2014

நகைக்கடைகளில் நகை வாங்கும்போது கேடியம் நகை என்கிறார்களே கேடியம் என்பதற்கு அர்த்தம் என்ன?
கேடியம் என்பது 'கேட்மியம்' என்பதன் சுருக்கம். சொக்கத் தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. அதில் வெள்ளி அல்லது செம்பு கலந்து செய்வர். அந்த நகையை அழித்து மீண்டும் வேறு நகை செய்யும் போது அதிலுள்ள முழுத் தங்கமும் திரும்பக் கிடைக்காது. அதைச் சேதாரம் என்று நம் தலையில் கட்டி விடுவர்.
இப்போது செம்பு, வெள்ளிக்குப் பதிலாக 'கேட்மியத்தை'க் கலந்து பொன் செய்வதால், அழித்துச் செய்யும் போது சேதாரம் ஏற்படுவதில்லை. எனவே அன்றைய தங்க விலைக்கு அதை அப்படியே எடுத்துக் கொள்கின்றனர்.
உதடுகளிலும், கை கால்களிலும் பனிக் காலங்களில் வெடிப்பு எதனால் ஏற்படுகிறது?
பனிக்காலங்களில் காற்று குளிர்ந்த தாகவும், ஈரப்பதம் மிகவும் குறைவாகவும், வறண்ட தன்மையாகவும் இருக்கும். நமது உடலின் மிருதுவான தோலில் உள்ள ஈரம் விரைவில் ஆவியாகி விடுவ தால், வெடிப்புகள் உண்டாகின்றன.
தேங்காய் எண்ணெயைக் கை, கால்களிலும், உதடு களிலும் தடவினால் ஈரப்பசை வெளியேறாமல் காக்கலாம்.
***
