sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

தெரிஞ்சுக்கோங்க!

/

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : ஜூலை 24, 2021

Google News

PUBLISHED ON : ஜூலை 24, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நோபல் பரிசு பெற்றபோது, 11 ரூபாய் மதிப்பிலான நுால் புடவையை தான் உடுத்தி இருந்தார் அன்னை தெரசா

* எறும்பு, அதன் உடலில் கசியும், 'பயூரமோன் ப்யூமரிக்' என்ற அமிலம் போன்ற ரசாயன பொருளின் வாசனையை நுகர்ந்தபடி தான் நகர்கிறது; ஒரு எறும்பு மற்றொன்றை பின் தொடர்கிறது

* டெசிபல் என்பது, ஒலி அளவை குறிப்பதாகும்; இது, 'டிபி' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. ஒருவர் சாதாரணமாக பேசும் போது ஏற்படும் ஒலியின் அளவு, 45 டெசிபல்

* ஒட்டகச் சிவிங்கி போல, பிணம் தின்னும் கழுகுக்கும் வாயால் சத்தம் எழுப்பும் திறன் இல்லை

* மின்னல், 1.6 விநாடிகள் மட்டுமே கண்களுக்கு புலப்படும்

* மின்மினிப்பூச்சி போல, சில வகை பாக்டீரியா, காளான், மீன் மற்றும் பூச்சிகளும் ஒளி சிந்தும் ஆற்றல் மிக்க உடலைப் பெற்றுள்ளன.

- -மல்லிகா அன்பழகன்

தெருவோரத்தில் விற்கும் பானிபூரி சாப்பிடுபவரா... சற்று எச்சரிக்கையுடன் இருங்கள்.

* பானிபூரி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், மைதா மாவு மற்றும் பேக்கிங்சோடா. இவற்றை, அதிகம் சாப்பிட்டால் உடல் நலம் கெடும். தொடர்ச்சியாக உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் நோய் வர வாய்ப்புண்டு

* சப்புகொட்டி உண்ண வேண்டும் என்பதற்காக, செயற்கை சுவையூட்டிகள் பானிபூரியில் சேர்க்கப்படுகின்றன. இதனால், வயிற்று உபாதைகள் ஏற்படும்; குடல் புண் ஏற்பட வாய்ப்பு உண்டு

* பானி பூரிக்கு பயன்படும் புளி தண்ணீரில் ஒரு வித ரசாயன வண்ணம் மற்றும் அதிகளவு பச்சை மிளகாய் சேர்க்கப்படுகிறது. இவற்றை தொடர்ந்து உண்பதால், உடல் உபாதை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

- ஷோபனா தாசன்






      Dinamalar
      Follow us