
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெயர்: ரம்யா லட்சுமி. அன்று மார்ச் 30, 2001 சிறுவர்மலர் அட்டை படத்தில் வந்த, குட்டி தேவதைதான் இன்றைய அழகு மங்கை. குட்டிப்பெண்ணாக இருக்கும் போதே ராதை வேடமிட்டு நடனமாடி மகிழ்வித்து, இன்று ஸ்ரீமதி பத்மாவிடம் பரத நாட்டியம் கற்று, அரங்கேற்றமும் செய்து விட்டாள். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ரம்யா, சிறுவர்மலர் இதழை எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்து, இப்போது நன்றாகத் தமிழ் பேசவும், எழுதவும் செய்கிறாள். 'சிறுவர்மலர் இதழில் வரும், படக்கதைகள், புதிர் பகுதி ரொம்ப பிடிக்கும். அதில், கலந்து கொண்டு பரிசுகளும் வாங்கியுள்ளேன். இன்று, பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். இன்றும் நான் விரும்பும் மலர் சிறுவர்மலர் இதழ்!' என்கிறார்.

