
பெயர்: அ.பி.புவனேஷ். திருப்பூர் விவேகானந்தா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவனுடைய மூன்று வயதிலேயே இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும், அதனுடைய தலைநகரத்தையும் கூறி, 'அகல் சாதனையாளர் விருது' பெற்றுள்ளான்.
இது மட்டுமல்ல, தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளை வாசிப்பதிலும், எழுதுவதிலும் திறமை பெற்றுள்ளான். இப்போது, இந்தியில் மூன்றாவது நிலையில் உள்ளான்.
நாணயங்கள், தபால் தலைகள், அபூர்வ புகைப்படங்கள், போன்றவற்றை, 'கலெக்ட்' செய்து வைத்துள்ளான். மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில், 'யுவ ஸ்ரீ கலா பாரதி' விருதும், நான்கு வயதில், 'இலக்கிய சுடர்', 'சிந்தனை செல்வர்' சான்றிதழ் பெற்றுள்ளான். மேலும் 40க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் பெற்றுள்ளான். விதைகள் நட்டு மரக் கன்றுகள் வளர்ப்பதில் மிகவும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறான். சூப்பர் பாய்தான்.
'ஹாட்ஸ் ஆப்' புவனேஷ்!

