PUBLISHED ON : நவ 25, 2023

அ நிறம் | அளவு
வீட்டில் பறந்து திரியும் ஈக்கள் மற்றும் நீல நிற வகை ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது, வயிற்று வலி, நிமோனியா போன்ற நோய்கள் பரவும்.
ஈக்களின் கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் போன்ற உறுப்புகள் வழியாக தான் பாக்டீரியாக்கள் பரவுகின்றன. அவை அசுத்தம் நிறைந்த இடங்களில் அமரும் போது பாக்டீரியா ஒட்டிக்கொள்ளும். பறந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது அங்கும் பரவும், ஈக்களின் ஒவ்வொரு அசைவிலும் நோயை பரப்பும் பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்பு உண்டு.
எனவே, எப்போதும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
