தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மூலிகைத் தொக்கு!

மூலிகைத் தொக்கு!

மூலிகைத் தொக்கு!


PUBLISHED ON : நவ 25, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

வெற்றிலை - 2

கற்பூரவல்லி இலை - 2

எலுமிச்சை இலை - 2

துளசி, சித்தரத்தை இலை - 0.25 கப்

எலுமிச்சை பழச்சாறு - 2 தேக்கரண்டி

சுக்குப் பொடி, மிளகுத்துாள், சீரகத்துாள், மஞ்சள் துாள், மல்லித்துாள் - தலா 1 தேக்கரண்டி

சீரகம், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

வெற்றிலை, கற்பூரவல்லி, எலுமிச்சை, துளசி, சித்தரத்தை இலைகளை சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில், நல்லெண்ணெய் சூடானதும், சீரகம் தாளித்து, அரைத்த விழுதை போட்டு வதக்கவும். பின், சுக்குப் பொடி, மிளகுத்துாள், சீரகத்துாள், மஞ்சள் துாள், மல்லித்துாள், உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும்.

சுவைமிக்க, 'மூலிகை தொக்கு!' தயார். சுடுசாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கு தொட்டுக்கொள்ளலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.

- எஸ்.ராஜம், திருச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us