
என் வயது, 31; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை எப்போது வரும் என்று எதிர்பார்த்து கண்கள் பூத்து விடுகிறது.
குழந்தைகள் வரையும் வண்ண ஓவியங்கள், ஓவியர் ரவிவர்மாவின் படைப்புகளையும் மிஞ்சுகின்றன. ஒவ்வொரு வாரமும், 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள், பள்ளி, கல்லூரி நாட்களை நினைவூட்டி மனதை நிறைக்கிறது.
என் குழந்தைகள், புள்ளிகளை இணைத்து படம் வரைந்து, வண்ணம் தீட்டி மகிழும் போது, வான் மேகங்களை தொட்டு விளையாடுவது போல் இருக்கிறது. கோபத்திலிருக்கும் கணவரை, 'மொக்க ஜோக்ஸ்' சொல்லி சிரிக்க வைத்து, ரசிப்பதில் ஆனந்தம் ஆயிரம் கிடைக்கிறது.இன்றைய இளைஞர்களுக்கு, 'இளஸ்... மனஸ்...' ஒரு வரப்பிரசாதம். என்னோடு இடைவிடாமல் உறவாடிக் கொண்டிருக்கும், சிறுவர்மலர் என்ற காவிய பூங்கா நீடு வாழ்க!
- பிரியா முருகன், கோவை.

