sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ் மனஸ்! (225)

/

இளஸ் மனஸ்! (225)

இளஸ் மனஸ்! (225)

இளஸ் மனஸ்! (225)


PUBLISHED ON : நவ 25, 2023

Google News

PUBLISHED ON : நவ 25, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...

என் வயது, 15; பிரபல தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. சென்னையில் குடும்பத்தாருடன் வசிக்கிறேன். கடந்த முழு ஆண்டு தேர்வு விடுமுறையில், தஞ்சாவூரிலிருந்து, 20 கி.மீ., துாரத்தில் கிராமத்தில் பாட்டி வீட்டுக்கு சென்றோம்.

பாட்டி வீட்டில் மிகப்பெரிய வட்டக்கிணறு, நீர் இறைக்கும் சகடையுடன் இருந்தது. கிணற்றில் விழுந்த பொருட்களை மீட்க, பாதாளகரண்டியையும் வைத்திருக்கிறார். கிணற்று நீர் குடிக்க, தேன் மாதிரி தித்தித்தது; சென்னையில், இது போன்ற கிணறை பார்த்ததே இல்லை. திறந்தவெளி கிணறுகள், இந்த காலத்தில் தேவையற்றவையா...

இப்படிக்கு,

மிருதுளா அஸ்வின்.


அன்பு செல்லத்துக்கு...

கிணறு என்பது, நிலத்தின் கீழ், நீர் படுகைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீரை எடுக்க தோண்டப்படும் குழி. வட்டம், சதுரம், நீள் சதுர வடிவங்களில் கிணறுகள் உண்டு.

இந்தியாவில், மொத்தம், 70 லட்சம் திறந்த கிணறுகள் உள்ளதாக புள்ளி விபரம் உள்ளது. அதே நேரத்தில், 3.3 கோடி ஆழ்துளை கிணறுகளும் உள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் தான் ஆழ்துளை கிணறுகள் அதிகம். இந்தியாவில் முதல் ஆழ்துளை கிணறு, 1930ல் போடப்பட்டது.

கிணறு சம்பந்தமாக, சில சுவாரசியமான தகவல்களை கூறுகிறேன்...

பண்டைய இந்தியாவில், மன்னர்களும், ராணிகளும் படிக்கட்டுகளுடன் கிணறுகள் அமைத்தனர். ராஜஸ்தான் மாநில பகுதியில் சாந்த் பாவ்ரி, ஜோத்பூரின் துார்ஜி கா ஜாவியா, குஜராத் மாநில பகுதியில் ராணி கி வாவ், டில்லி பகுதியில் அக்ரஸென் கி பவ்லி, கர்நாடக மாநிலம் ஹம்பியில் புஷ்கரனிஸ், ஹரியானாவில் பாவ்வி காஸ் அலிஷா கிணறுகள் அமைத்தனர்.

படிக்கட்டுடன் அமைந்த கிணறுகளின் கட்டடக்கலை மாயாஜாலத்தை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும். மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியா, மெக்காவில், ஜம்ஜம் என்ற கிணறு உள்ளது. அது காபாவிலிருந்து, 66 அடி துாரத்தில் இருக்கிறது.

அந்த கிணற்றிலிருந்து நொடிக்கு, 19 லிட்டர் நீர் இறைக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் அதை புனித நீராக கருதுகின்றனர்.

இந்தியாவில், அசாம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிராவில் கச்சா எண்ணெய் எடுக்கும் கிணறுகள் உள்ளன.

நீரின் தேவை அசுரமாய் அதிகரித்ததால் திறந்தவெளி கிணற்றிலிருந்து ஆழ்துளை கிணறுக்கு தாவி விட்டனர் மக்கள். கி.பி., 2050ல் நிலத்தடியில் நீர் முழுமையாக தீர்ந்து போகும் அபாயம் இருக்கிறது.

கிணற்று நீரை கொதிக்க வைத்து குடிப்பது பாதுகாப்பானது. கிணற்று நீரில் மாசு ஏற்பட்டால் அதைப் போக்க மீன் வளர்க்கலாம். ஆனால், மீன் இறந்து மிதந்தால் கிணற்று நீர் நாறிப் போகும்.

உன் தாத்தா, கரை புரண்டோடும் ஆற்றை பார்த்தார். உன் அப்பா, வட்ட வடிவ கிணற்றை பார்த்தார்; நீ ஆழ்துளை கிணற்றை பார்க்கிறாய்; நாளை நீர் வற்றி போன கட்டாந்தரையை பார்க்க வேண்டிய நிலை வரும். அதை தவிர்க்க நிலத்தடி நீரை சேமிப்போம்; நீர் மேலாண்மையை உயர்த்தி பிடிப்போம்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.






      Dinamalar
      Follow us