தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பற... பற...

பற... பற...

பற... பற...


PUBLISHED ON : பிப் 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூன்று வகையான உயிரினங்களால் பறக்க முடியும். பறவைகள், வவ்வால்கள் மற்றும் பூச்சிகள். பறவைகள்தான், சிறந்த பறப்பான்கள். காரணம், அவைகளின் சிறகுகள் நீண்ட மெல்லிய சிறகுகள் அல்லது சிறிய மிருதுவான சிறகுகள். பறவையின் உடலின் பெரும் பகுதி களை சிறகுகள் சூழ்ந்துள்ளன. சிறகுகள் சூழாத பறவையின் பகுதிகள் அதன் அலகு, கண்கள் மற்றும் கால்கள் மட்டுமே. பறவையின் உடம்பை மூடுவது மட்டுமல்லாமல், பல வேலைகளை சிறகுகள் செய்கின்றன. சிறகுகள் பறவையை கதகதப்பாகவும், உலர்ந்தும் வைத்து இருப்பதோடு வானில் பறக்கவும் செய்விக்கிறது.

காற்றின் சக்தி: காகிதத்தின் மீது மிக வேகமாக ஊதும் போது, காகிதத்தின் மேல் பகுதியில் காற்று அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகரும். இந்த வகையில் காற்றில் ஏற்படும் வேறுபாடு காகிதத்தை மேல் நோக்கி தூக்க செய்கிறது. அது போன்றே பறக்கும் பறவையின் மேல் பகுதி, அதன் கீழ்பகுதியை விட வேகமாய் நகருகிறது. இந்த காற்றின் செயல்பாடே பறவையை மேல் நோக்கி உயர செய்து பறக்க வைக்கிறது.

பறக்கும் விதம்: பறப்பது என்பது கடின வேலை. எல்லா பறவைகளும் எல்லா நேரமும் சிறகுகளை அடிப்பதில்லை. சில பறவைகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறகடிப்பதை நிறுத்தி சக்தியை சேமிக்கின்றன.

காற்றால் தடுக்க முடியாது!: ஒவ்வொரு பறக்க உதவும் சிறகும் லட்சக்கணக்கான நுண்ணிய இழைகளை கொண்டிருக்கும். இவை ஒன்றுக்கு ஒன்று சேர்ந்து சிறகிற்கு வடிவம் தருகிறது. கடுமையான காற்றடிப்பின் போதும் இவை தாக்குபிடிக்க வைக்கும்.

சிறகடிக்கும் விமானங்கள்!: இந்த புறாக்கள் பறக்கையில் சிறகடித்து அதன் சிறகுகளை கீழே இறக்கும்போது அதன் சிறகுகள் மூடி கொண்டு காற்றை எதிர்த்து நகர உதவு கிறது. சிறகுகள் மேலே போகும்போது சிறகுகள் திறந்து கொண்டு காற்றை கடக்க செய்கிறது.

சீவி சிங்காரி!: பறவைகள் சிறகுகளை அலகுகளால் கோதி, சுத்தமாக வைத்து கொள்ளும். ஒவ்வொரு இழையையும் சிக்கெடுப்பது போல சீவி, கோதி, கொத்தி சுத்தம் செய்வதன் மூலம் பூச்சிகளை, அழுக்குகளை அண்டவிடாமல் செய்துவிடும். பெரும்பாலான பறவைகள் தங்கள் சிறகுகளுக்கு எண்ணெய் தடவி, நீர் புகுந்து விடாமல் தடுத்து கொள்ளும். வாலிற்கு சற்று மேலே இருக்கும் கோதிவிடும் சுரப்பியிலிருந்து இந்த எண்ணெய் சுரக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us