
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
உளுந்தம் பருப்பு - 4 தேக்கரண்டி
வேர்கடலை - 3 தேக்கரண்டி
எண்ணெய், புளி, உப்பு, பெருங்காய தூள் - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் காய்ந்ததும் வேர்கடலை, காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை வறுக்கவும். பெருங்காயத்துாள், தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை தனியே வறுக்கவும். ஆறிய பின், உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். சுவைமிக்க, 'இஞ்சி பொடி' தயார்.
சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். காற்று புகாத டப்பாவில் பாதுகாத்து, மழை மற்றும் குளிர்காலங்களில் பயன்படுத்தலாம்.
- எஸ்.வள்ளி சித்ரா, கிருஷ்ணகிரி.