தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காசேதான் கடவுளடா!

காசேதான் கடவுளடா!

காசேதான் கடவுளடா!


PUBLISHED ON : செப் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கி.மு.,ஏழாம் நூற்றாண்டிலேயே முதல் நாணயம் வெளியிடப் பட்டு விட்டதாக வரலாறு கூறுகிறது. ஆசியா மைனரில் உள்ள செல்வந்தர்களான லிடியன் இனத்தவரே காசின் பயன்பாட்டை அறிந்து, அதை வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது, 75 சதவீதம் தங்கமும், 25 சதவீதம் வெள்ளியும் கலந்த, 'எலக்ட்ரம்' என்ற இயற்கையான உலோகக் கலவையால் வெளியிடப்பட்டது. இது, 'பீன்ஸ் விதை' அளவுதான் இருந்தது. 'ஸ்டேட்ட' அல்லது 'ஸ்டேன்டர்ட்' என்று இது வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட காசுகளுக்கு ஒழுங்கான உருவமோ, அழகான தோற்றமோ உடையதாக இல்லை. காசுகள் ஒரே மதிப்பு உடையதாக இருப்பினும், ஒன்றைப் போல் மற்றொன்று இல்லை. கி.பி.,500ல் நாணயம் அச்சிடும் கலை பெரிதும் வளர்ந்து, ஓரளவு நாணயப் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, நாணய மதிப்பீடுகள் ஒழுங்கு படுத்தப்பட்டு, நல்ல வேலைப்பாடுகளும், தரமும் வாய்ந்த கலா ரசனையோடு கூடிய காசுகள் பொறிக்கப் பட்டன.

இவை, விரைவாகவும், ஏராளமான அளவிலும் பொறிக்கப்பட்டு எடை குறைவாகவும் இருந்தன. ஆகையால், இவற்றை இடம் விட்டு இடம் எடுத்துச் செல்வது சுலபமாக இருந்தது.

இங்கிலாந்தில் மட்டும், நார்மன் வெற்றிக்குப்பின், 70 நாணயச் சாலைகள் இயங்கின. ஆனால், பிரிட்டிஷ் அரசு, 1850ம் ஆண்டு நாணயம் அச்சிடும் தொழிலை அரசுடமையாக்கி, தனியார் நாணயத் தயாரிப்பைச் சட்ட விரோதமாக்கியது.

வரலாறுகளைப் பார்க்கும் போது, இந்தியாவில் லெமுரியா கண்டம் இணைந்திருந்தபோதே நாணயம் புழக்கத்தில் இருந்து அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.

மொகஞ்சதாரோ, ஹரப்பா, காவிரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் நாணயங்கள், நிச்சயம் மேற்கத்திய நாணயங்களுக்கு முந்தைய காலத்தைச் சார்ந்தவையே. நாணயத் தயாரிப்பால் மக்கள் பொருளாதார அறிவு மட்டுமன்று, உலோகம் பற்றிய அறிவையும், அனுபவத்தையும் பெற்றிருந்தனர் என்பது புரிகிறது.

சென்னையிலும், கோவையிலும் இவ்விதம் நாணய அச்சடிப்பு நடந்துள்ளது என்பதை இங்கு இருக்கும், 'நாணயக்காரத் தெரு' என்ற பெயர்கள் தெரிவிக்கின்றன. இப்போது தாற்பணம், கடன் அட்டை, நாணயத்திற்குப் பதிலாகப் புழக்கத்தில் வந்து விட்டன. காகிதப் பணத்தில், 'பிராமிஸ்' என்ற வார்த்தை இருக்கும். அதாவது, 'இந்தத்தாள் அதன் முகமதிப்பை நாணயமாகப் பெற்றது என்று உறுதி அளிக்கிறேன்!' என்பது இதன் பொருள்.

அமெரிக்கப் பழங்குடி மக்களான செவ்விந்தியர், கடல் சங்குகள், கிளிஞ்சல்களை அழகாக அறுத்து அதைக் காசாகப் பயன்படுத்தினர். இதற்கு, 'வாம்ப்பம்' என்ற பெயரும் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us