தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தங்க வளையல்!

தங்க வளையல்!

தங்க வளையல்!


PUBLISHED ON : ஜன 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யமுனை நதிக்கரையோரத்தில், புகழ்பெற்ற ஒரு சீக்கியக்குரு, ஒரு பாறையின் மீது அமர்ந்த வண்ணம் சமய நூல் ஒன்றில் மூழ்கிக்கொண்டு இருந்தார்.

அவருக்கு ஒரு சீடன் இருந்தான். அவன் பெயர் சிக்கந்தர். பணம் படைத்தவன். குருவுக்குச் சீடனாக அவன் இருந்த போதிலும், அவனுடைய மனதில் பொருளாசை குடிகொண்டிருந்தது.

இந்நிலையில் தம்முடைய குருநாதருக்கு ஒரு பரிசு அளிக்க வேண்டும் என்று விரும்பினான் சீடன் சிக்கந்தர்.

இரண்டு தங்க வளையல்களை எடுத்துக் கொண்டு, குருநாதர் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான். சமய நூலில் மூழ்கியிருந்த குருநாதரின் சிந்தனையை இடைமறிக்கும் விதமாக, ''குருநாதரே! என்னுடைய இந்தச் சாதாரண அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை தங்கள் மனம் ஒப்புக் கொள்ளாதென்றே நினைக்கிறேன்...'' என்று சொல்லிக் கொண்டு, தங்க வளையல்களை அவர் முன்பு பிரித்துக் காட்டினான்.

குருநாதர் ஒரு வளையலை எடுத்துப் பார்த்தார். அதில் பதிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கற்கள் ஜொலித்து மின்னின.

அடுத்த கணம்!

அவரது கையில் சுழன்று கொண்டிருந்த தங்க வளையல் நழுவி, நீருக்குள் விழுந்து மறைந்தது!

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சீடன் சிக்கந்தர், சட்டென்று நீரில் குதித்தான்! காணாமல் போன தங்க வளையலை நாலாப் பக்கமும் தேடினான். ஆனால், அந்த வளையல் கிடைத்தபாடில்லை.

அவன் நீரில் அலைந்து கொண்டிருந்த அந்த வேளையில், குருவோ, தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விட்டுத் தன் கவனத்தைத் திருப்பவில்லை.

வெகு நேரத்திற்கு பின், சொட்டச் சொட்ட நனைந்தவனாக நீரைவிட்டு வெறுங்கையோடு வெளியே வந்த சீடன் சிக்கந்தர், மிகுந்த களைப்புடன் காணப்பட்டான்.

குருநாதரைப் பார்த்து, ''சுவாமி! அந்த வளையல் எந்த இடத்தில் விழுந்தது என்று தாங்கள் சொன்னால், அதை இப்பொழுதே மீண்டும் தேடி எடுக்க என்னால் முடியும்...'' என்றான்.

பணிவோடு சீடன் கூறியதைக் கேட்ட குருநாதர், அவன் கொண்டு வந்த இன்னொரு தங்க வளையலையும் எடுத்து, ஆற்றில் வீசியெறிந்து, ''அதோ... அந்த இடம்தான்...'' என்றார்.

சீடன் மறுபடியும் நீரில் குதித்துப் பொருளைத் தேடிக் கொண்டிருந்தான். குருவோ, ஆசையை அறவே ஒழித்துவிட்ட இன்னொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us