PUBLISHED ON : ஜன 17, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
ஆடியோ-வீடியோ ஆன்டெனாக்கள்!
இந்தியாவின் முதல் வானொலி ஒலிபரப்பு இரண்டு தனியார் வானொலி நிலையங் களுடன் தொடங்கியது. மும்பையிலும், கொல்கத்தாவிலும் இந்த சேவை 1927ல் தொடங்கப்பட்டது.
1930 முதல் அதை அரசு ஏற்றது. 'இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்' என்ற பெயரில் ஒலிபரப்பை தொடங்கியது. அதுதான் 1936க்கு பின், 'ஆல் இந்தியா ரேடியோ' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையும் 1957ல் 'ஆகாசவாணி' என்று மாற்றிவிட்டனர்.
இந்தியாவின் முதல் செய்தி ஒலிபரப்பு 1927 ஜூலை 23ல் மும்பை தனியார் நிலையத்தில் இருந்து ஒலிபரப்பானது. ஆல் இந்தியா ரேடியோ வின் முதல் செய்தி ஒலிபரப்பு 1937 ஆகஸ்டில் தொடங்கியது.
'ஆல் இந்தியா ரேடியோ' அயல் நாடுகளுக்கான ஒலிபரப்பையும் செய்து வருகிறது. மொத்தம் 24 மொழிகளில் ஒலி பரப்பு செய்யப்படுகிறது. அவற்றில் 8 இந்திய மொழிகள். இதுபோக ஆங்கிலம் மற்றும் 15 அயல்நாட்டு மொழிகளில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.
இதேபோல் இந்தியாவில் தேசிய தொலைக் காட்சி ஒளிபரப்பான தூர்தர்சன், உலகின் மிகப் பெரிய ஒளிபரப்பு அமைப்புகளில் ஒன்று. இது சுமார் 984 டெரிஸ்ட்ரியல் டிரான்ஸ் மீட்டர்கள் வழியாக இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 85 சதவீதம் பேரை சென்று சேர்கிறது. தூர்தர்ஷன் இந்தியாவின் 46 நகரங்களில் நிகழ்ச்சி தயாரிப்பு மையங்களை பெற்றுள்ளது.
இந்தியாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரலாறு டெல்லியில் இருந்து ஆரம்பிக்கிறது. 1959-ல் இதன் சோதனை ஒளிபரப்பு தொடங்கியது. இது வாரத்திற்கு இரண்டு முறை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மூன்று மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது. இது 15 மைல் சுற்றளவுக்கு மட்டும் தெரியும். 1965 முதல் தினமும் ஒரு மணி நேரம் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
அகில இந்திய வானொலியின் ஒரு பகுதியாக இருந்த டெலிவிஷன் சர்வீஸ் 1976 முதல் தூர்தர்ஷன் என்ற புதிய பெயரில் தனித்து இயங்கத் தொடங்கியது. 1994, ஆகஸ்ட் 15 முதல் தூர்தர்ஷன் புதிதாக 13 சேனல்களை ஒளிபரப்பத் தொடங்கியது.
இந்திய ஒளிபரப்பு வரலாற்றில் 1997 ஜூலை 22 ஒரு முக்கியமான நாளாகும். அன்றுதான், 'பிரசார் பாரதி' குறித்து அரசின் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து 1997 செப்டம்பர் 15 முதல் 'பிரசார் பாரதி' சட்டம் அமலுக்கு கொண்டு வரப் பட்டது. இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் மீதான மத்திய அரசின் கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டு, தன்னாட்சி வழங்கப் பட்டது. இன்றைக்கும் தூர்தர்ஷன் வட இந்திய மாநிலங் களில் முக்கியத் துவம் பெற்று விளங்குகிறது.
கருப்பு நிற சிங்கமா?
சீனாவிலுள்ள புஷ்ஹோவ் நகரில் வீட்டில் வளர்க்கப்படும் மீன்களின் சர்வதேச கண்காட்சி போட்டி நடைபெற்றது. இதில் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட விதவிதமான தங்கநிற மீன்கள் (கோல்டுபீஷ்) பங்கேற்றன. அவை தனித்தனி கோப்பைகளில் நீரில் மிதக்க விடப் பட்டு, நீச்சல் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, 12 மீன்கள் தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டன. இதில் அதிக எடை பிரிவில் வாங் ஷாங்ஸியாங் என்பவருடைய 1/2 கிலோ (3.3 பவுண்ட்) எடை கொண்ட ராட்சத கோல்டுபிஷ், முதல் பரிசை தட்டிச் சென்றது. அதிக நீளமான பிரிவில் 14.2 அங்குல நீள கருப்பு நிற சிங்கத்தலை மீன் தேர்வு பெற்றது.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
