PUBLISHED ON : ஜன 17, 2014

அ நிறம் | அளவு
சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றிற்கு கவியரசர் கண்ணதாசனை அழைத்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரமாகியும் கவியரசர் அவைக்கு வந்த பாடில்லை. கூட்டம் பொறுமை இழந்து சலசலத்தது. நிகழ்ச்சி அமைப்பாளருக்கு சங்கடமாயிற்று. அந்நிலையில் கவியரசர் வந்து சேர்ந்தார். உடனே பேச ஆரம்பித்தார். சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். சிலருக்கு புத்த மதம் பிடிக்கும். ஆனால், எனக்குப் பிடித்த ஒரே மதம் தாமதம் என்று சொல்லி அவையோரை ஒரு பார்வை பார்த்தார். அவையோர் அவருடைய வார்த்தை நயத்தை ரசித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
