PUBLISHED ON : செப் 14, 2018

அமெரிக்க அதிபராக, உட்ரோவில்சன் இருந்த போது, நடந்த யுத்தத்தில், ஏராளமான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது இறுதிச் சடங்கு, நியூயார்க் நகரில் நடக்க, ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் பங்கேற்க விரும்பினார், அதிபர் வில்சன். அவரது பாதுகாவலர்கள் உளவுத்துறை தகவல்படி, அந்த இடத்தில், அவரைக் கொல்ல, பயங்கர சதி நடப்பதாக கூறினர்.
அச்சமயம், வில்சனின் நெருங்கிய நண்பரும், 'நீங்கள் அங்கு செல்ல வேண்டாம்; ஒரு நல்ல அதிபரை, நாங்கள் இழக்க விரும்பவில்லை...' என்று வேண்டுகோள் விடுத்தார்.
'என்னை தடுக்க வேண்டாம்; ஒரு கோழை அமெரிக்க அதிபராக இருப்பதை, என்னால் ஏற்க முடியாது...' என்று கூறி, அங்கு சென்று வந்தார்.
வெற்றிக்கும், தோல்விக்கும் பொறுப்பு ஏற்பவர்கள் தான் தலைவர்கள்; பயம், தலைமையை வீழ்த்தி விடும். நல்ல தலைவர்கள், துணிந்து செயல்படும் போது தான், எதிரிகள் மனதில், அச்சம் ஏற்படும்; எதிரிகளைக் கண்டு பயப்படுவோர், தலைவர்களாக நீண்ட காலம் நிலைப்பதில்லை.
