sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

நற்குணம்!

/

நற்குணம்!

நற்குணம்!

நற்குணம்!


PUBLISHED ON : செப் 02, 2023

Google News

PUBLISHED ON : செப் 02, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 12ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...

வகுப்பு ஆசிரியராக இருந்த பாலகிருஷ்ணன், தமிழ் பாடமும் நடத்துவார். செய்யுள் பகுதிகளை ராகமாக பாடி, பசுமரத்தாணி போல மனதில் பதிய வைப்பார். தினமும், ஒரு மாணவருடன், மதிய உணவை பகிர்ந்து உண்பார். பள்ளி வளாகத்தில், மரங்கள் நட்டு வளர்த்து வந்தார்.

இரவில், லாந்தர் விளக்குடன், வீடு வீடாக வலம் வந்து, மாணவர்கள் படிப்பதை கண்காணித்து அறிவுரை கூறுவார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக தனி பயிற்சி வகுப்பும் நடத்தி வந்தார். பள்ளி படிப்பை முடித்த பின், வேலைக்கு செல்ல தக்கவாறு அறிவுரை சொன்னார். அவரது வழிகாட்டுதலால், மத்திய அரசின் துார்தர்ஷன் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, திறம்பட பணியாற்றி ஓய்வு பெற்றேன்.

எனக்கு, 60 வயதாகிறது; அந்த ஆசிரியர், 2001ல் மரணமடைந்த போது, இறுதி சடங்கில் அந்த ஊரே திரண்டு பங்கேற்றது. அனைவரும், அவரது நற்செயல்கள் குறித்து நெகிழ்வுடன் பேசியதை கேட்டேன். நற்குணங்கள் நிறைந்தவரிடம் கல்வி பயின்றதை வாழ்வின் பெரும்பேறாக கருதுகிறேன்.

- பி.சாந்தி கிருபாகரன், சென்னை.

தொடர்புக்கு: 98842 37061







      Dinamalar
      Follow us