
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 4
காய்ந்த மிளகாய் - 6
பெரிய வெங்காயம் - 1
உளுந்தம் பருப்பு - 2 மேஜை கரண்டி
பெருங்காயத்துாள், கடுகு, சீரகம், மிளகு, தேங்காய் துருவல் - சிறிதளவு
இஞ்சி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில், எண்ணெய் சூடானதும் கடுகு தாளித்து, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாயை பொன்னிறமாக வறுக்கவும். பின், விதை நீக்கி துண்டாக்கிய நெல்லிக்காய், நறுக்கிய இஞ்சி, வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல், உப்பு மற்றும் பெருங்காயத்துாள் சேர்த்து, வதக்கி சூடு ஆறிய பின் அரைக்கவும். சுவை மிக்க, 'நெல்லிக்காய் துவையல்!' தயார்.
சத்துக்கள் நிறைந்தது. சாதத்துடன் கலந்து உண்ணலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.