PUBLISHED ON : மார் 13, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கவுனி அரிசி - 1 டம்ளர்
வெல்லம் - 1 டம்ளர்
துருவிய தேங்காய் - சிறிதளவு
நெய், ஏலக்காய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கவுனி அரிசியை சுத்தம் செய்து, இரண்டு டம்ளர் நீரில் வேக வைக்கவும். வெல்லத்தை பொடியாக்கி, நீர் சேர்த்து காய்ச்சி வடி கட்டவும்.
இதனுடன், வேக வைத்த அரிசி, நெய், ஏலக்காய், தேங்காய் துருவல் போட்டு இளஞ்சூட்டில் மசிக்கவும். சுவையான, 'கவுனி அரிசி சர்க்கரை பொங்கல்' தயார். அனைத்து வயதினரும் உண்ணலாம்; ஆரோக்கியம் மேம்படும்!
- லெ.விஜயலட்சுமி லட்சுமணன், சிவகங்கை.

