தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெரிய புத்தர்!

பெரிய புத்தர்!

பெரிய புத்தர்!


PUBLISHED ON : செப் 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிய நாடான சீனா, லெஷன் நகருக்கு அருகே லிக்யூன் மலை உள்ளது. இதன் சிகரங்களில் ஒன்றில் புத்தரின் உயரமான சிலை செதுக்கப்பட்டுள்ளது. இது, மின்ஜியாங், சிங்யீ மற்றும் தாது ஆறுகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது.

இந்த சிலையின் உயரம், 233 அடி. கி.பி., 713ல் தாங் அரச வம்ச காலத்தில் சிலை அமைக்கும் பணி துவங்கியது. கடுமையான கெடுபிடிக்கு இடையே, 90 ஆண்டுகளுக்கு பின், பணி முடிந்தது. இந்த பிரமாண்ட புத்தரின் மூக்கு, சாதாரண மனிதனை விட, மூன்று மடங்கு உயரமானது. இந்த கற்சிலையின் காதுகள் மட்டும், மரத்தில் செதுக்கி பொருத்தப்பட்டுள்ளன.

இது, யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us