தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : செப் 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 73; கணித பேராசிரியராக அண்ணாமலை பல்கலையில் பணியாற்றி, ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழை, 20 ஆண்டுகளாக படித்து வருகிறேன். குறிப்பாக, சிறுவர்மலர் இதழில், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியையும், சிறுகதைகளையும் படித்து, குறிப்பெடுத்து கொள்வேன்.

பள்ளி, கல்லுாரி மன்ற கூட்டங்களில் என்னை பேச அழைப்பர். பேச்சின் இடையே, குறிப்பெடுத்துள்ள நல்லாசிரியர்கள் பற்றியும், நீதிக் கதைகளையும் எடுத்து கூறுவேன். மாணவ, மாணவியர் ஆர்ப்பரித்து மகிழ்வர்.

சிதம்பரம், காது கேளாதோர் சிறப்பு பள்ளியில், வாரத்திற்கு ஒரு நாள், கணிதம் கற்றுத் தருகிறேன்.

வகுப்பின் முடிவில், சிறுவர்மலர் இதழை மாணவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்வேன்.

அப்போது, அவர்கள் அளவில்லா மகிழ்ச்சியடைவதை காண்கிறேன். இதை சேவையாக செய்து வருகிறேன்.

என் மாணவப் பருவ அனுபவமும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் இடம் பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன்.

வாழ்க வளர்க சிறுவர்மலர்!

- கே.வைரமாணிக்கம், கடலுார்.

தொடர்புக்கு: 94436 65940

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us