PUBLISHED ON : ஆக 03, 2018

அ நிறம் | அளவு
தேவையானப் பொருட்கள்:
முளைக் கட்டிய பச்சை பயிறு - 100 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கடலை மாவு - 4 தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
முளை கட்டிய பச்சை பயிறை, நன்றாக வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். அதில், பொடியாக வெட்டிய, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை, உப்பு, கடலை மாவு அனைத்தையும் போட்டு, நன்கு பிசைந்து வடை போல் தட்டி, தோசைக் கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி, திருப்பி போட்டு எடுத்தால், மொறு மொறுப்பான, சூப்பரான கட்லட் தயார்; சத்துமிகுந்ததும் கூட.
- ஜெ.செல்வி, சென்னை.
