PUBLISHED ON : ஆக 03, 2018

என் வயது, 70, தினமலர் நாளிதழின் சந்தாதாரர். சிறுவர்மலர் இதழின் அடிமையிலும் அடிமை! ஒவ்வொரு நாளும், காலை, 7:00 மணிக்கு ஏஜன்ட் மூலம் தினமலர் கைக்கு கிடைத்துவிடும். அப்போது தான் நிம்மதி.
ஆனால், சிறுவர்மலர் வரக்கூடிய வெள்ளிக் கிழமை மட்டும், காலை, 7:00 மணி வரை, ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாது. அதிகாலையில், தொழுகையை முடித்து விட்டு காலை, 6:00 மணிக்ககே ஏஜென்டிடம் சென்றுவிடுவேன்.
தினமலர் நாளிதழ் கட்டை நானே பிரித்து, சிறுவர்மலர் புத்தகத்தை எடுத்து, அங்கேயே உட்கார்ந்து முழு மலரையும் படித்தபிறகு தான் என்னுடைய ஆர்வம் அடங்கும்.
வீட்டிற்கு வந்த பிறகு தினமலர் செய்தி தாளை படிப்பேன்.
சிறுவர்மலர் இதழுக்கும், எனக்கும் உள்ள உறவை வார்த்தைகளால் சொல்ல முடியாது; என்னுடைய பொது அறிவை வளர்த்தது சிறுவர்மலர் தான்! வாழ்க பல்லாண்டு!
- ஹாஜி.எம்.சுஐபு, ராமநாதபுரம்.
