தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பள்ளம் கற்பிக்கும் பாடம்!

பள்ளம் கற்பிக்கும் பாடம்!

பள்ளம் கற்பிக்கும் பாடம்!


PUBLISHED ON : அக் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மாவட்டம், சமயநல்லுார் அரசு பள்ளியில், 1968ல், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பு ஆசிரியை முத்துகாமாட்சி, செயல்முறை விளக்கம் தந்து, பாடங்களை மனதில் பதிய வைப்பார்.

ஆங்கில மாத நாட்களை நினைவில் கொள்வதில், திணறல் ஏற்படும்; தவறாக விடை சொல்வோம். இதை சுலபமாக, நினைவில் கொள்ளும் வகையில், எளிய பயிற்சி கொடுத்தார்.

இடது கையில், பெருவிரல் தவிர, நான்கு விரல்களை மடக்கி, திருப்பி வைத்தால், நான்கு மேடுகளையும், இணையான பள்ளங்களையும் காணலாம். வலது கை ஆட்காட்டி விரலால், இந்த மேடு, பள்ளங்களை வரிசைப்படி தொட்டு செல்ல வேண்டும்.

மேட்டில் ஜனவரி துவங்கும்; அதற்கு, 31 நாட்கள். அடுத்து வரும் பள்ளம், பிப்ரவரியை குறிப்பதால், 28, 29 நாட்கள் என, மாறிவரும்.

அடுத்த மேடு, மார்ச் மாதத்தை குறிக்கும்; தொடரும் பள்ளம் ஏப்ரல்... இதன்படி, மேடு, 31 நாட்களையும், மற்றவை, 30 எனவும் கொள்ள வேண்டும். வரிசையில் சுண்டு விரல் மேட்டை மட்டும், இருமுறை தொட்டு, ஜூலை, ஆகஸ்ட் என கொண்டு, திரும்ப வேண்டும்.

இப்போதும், இந்த முறையை பயன்படுத்தி வருகிறேன். இவ்வாறு கணக்கிடும் போதெல்லாம், அந்த ஆசிரியையை, நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.

- வெ.தேவகி ராமன், தேனி.

தொடர்புக்கு: 98422 51215


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us