PUBLISHED ON : ஆக 08, 2020

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், கோட்டையாடி, அருளையா துவக்கப்பள்ளியில், 1985ல், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, என் தந்தை இறந்தார். ஆசிரியைகள் வனிதா, சுப்புலட்சுமி, கோதை ஆகியோர் துக்கம் விசாரிக்க வந்தனர்.
என் அம்மாவுக்கு ஆறுதல் கூறியதுடன், 'பள்ளில் சத்துணவு சமையல் வேலை காலியாக உள்ளது. அதில் சேருங்கள்; வாழ்வாதாரமும், அன்பும் கிடைக்கும்...' என, நம்பிக்கையூட்டினர்.
அந்த பணியில் சேர்த்து, சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றார் அம்மா. அந்த காலத்தில் படித்தவர்கள் எல்லாம், அம்மாவை எங்கு பார்த்தாலும், 'ஆச்சி...' என்று அன்புடன் அழைத்து நலம் விசாரிப்பர். அப்போது, எல்லையற்ற மகிழ்ச்சி அடைவார். அதை கவனித்து பூரித்திருக்கிருக்கிறன்.
எனக்கு, 44 வயதாகிறது. திக்குத் தெரியாத நிலையில் குடும்பம் தத்தளித்த போது, உடனிருந்து வழிகாட்டிய ஆசிரியைகளை, நன்றி பெருக்குடன் நினைவில் கொள்கிறேன்.
- எம்.பாமா முருகன், சென்னை.
