தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹகியா சோபியா!

ஹகியா சோபியா!

ஹகியா சோபியா!


PUBLISHED ON : செப் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துருக்கியின் தலைநகர், இஸ்தான்புலில் இருக்கிறது, ஹகியா சோபியா. துருக்கி மொழியில், 'அயசோபியா' என்று அழைக்கப்படுகிறது. இது தவிர, செயின்ட் சோபியா, சர்ச் ஆப் ஹோலி என்றும் பல பெயர்கள் உள்ளன. உலகில் உள்ள முக்கியமான கட்டடங்களில் இதுவும் ஒன்று.

கான்ஸ்டாண்டில் மன்னரின் வாரிசுகளால் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது பின்னர் ஐஸ்டினியன் என்ற மன்னரால் இடித்து, மீண்டும் கட்டப்பட்டது. கி.பி.,532, கி.பி.,537 வரை கட்டடம் கட்டும் பணி நடைபெற்றது. இதுதான் இன்றைய ஹகியா சோபியா.

பைஸாண்டைன் கட்டடக் கலைக்குச் சான்றாக இருக்கிறது. இதை இசிடோர், ஆந்திமியஸ் என்ற இருவர் வடிவமைத்து இருக்கிறார்.

பலமுறை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டிருக்கிறது. செவ்வக வடிவில், 230 அடி அகலமும், 246 அடி நீளமும் கொண்டது ஹகியா சோபியா. தேவாலயத்தின் நடுவில் இருக்கும் கூரை, 102 அடி அகலம் கொண்டது.

மிகப் பெரிய, 12 கண்ணாடிக் கதவுகள் இருக்கின்றன. தேவாலயத்தின் உள்ளே மார்பிள், பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு வண்ணங்களில் மொசைக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. சூரிய வெளிச்சத்தில் வண்ணக் கண்ணாடி ஜன்னல்களில் இருந்து வண்ண ஒளிகள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

ஒட்டோமான் காலத்தில் தேவாலயம் மசூதியாக மாற்றப்பட்டது. மசூதியாக மாறிய பின்னரும் ஹகியா சோபியா கட்டடத்தில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ௫௦௦ ஆண்டுகள் மசூதியாக இருந்தது. தற்போது, மியூஸியமாக மாறி இருக்கிறது.

ஏய்... யு.... நீ மாறிகிட்டே இருப்பியா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us