தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மகிழ்வான வேட்டைக்காரர்கள்

மகிழ்வான வேட்டைக்காரர்கள்

மகிழ்வான வேட்டைக்காரர்கள்


PUBLISHED ON : ஆக 05, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேற வேற வேற வேட்டைக்காரன்!

சிலந்திகளின் பல வகைகள், தன் இரையை பிரத்யேக இழையின் உதவியின்றியே பிடிக்கும். அப்படிப்பட்ட சிலந்திகள் வேட்டைக்கார சிலந்திகள் எனப்படும். இவற்றில் சிலவோ தன்னுடைய பகுதியை காவல் காக்கும். ஏதாவது பூச்சி சிக்காதா என காத்து கிடக்கும். வலை பின்னும் சிலந்திகளை விட இந்த வேட்டைக்கார சிலந்திகளுக்கு வலிமைமிக்க தாவும் கால்களும், மிக கூர்மையான பார்வையும் உண்டு. இவற்றின் உதவியால் தன் இரையை எளிதில் அடையாளம் காணும்.

ஒரு வேட்டைக்கார சிலந்திக்கு அதன் தலையின் முன்புறம் எட்டு கண்கள் இருக்கும். இக்கண்கள் மிகச் சிறியது. அதனால் மிக அரிதாகவே சிலந்தி திரும்ப வேண்டி இருக்கும். அந்தளவுக்கு இந்த எட்டு கண்கள் உதவுகின்றது.

இது உலகின் மிகப் பெரிய வேட்டைக்கார சிலந்தி வகைகளில் ஒன்றான 'சிலியன் சிவப்புகால் சிலந்தி'. காலிலிருந்து காலிற்கான இடைவெளி 13 செ.மீட்டர். இரவில் வேட்டையாடும் இவைகளில் இரை லிஸ்ட்டில் சிறிய பறவைகளும் சுண்டெலி களும் உண்டு.

சிலந்தி உடலில் உள்ள முடிகள் சிறந்த உணர்வுள்ளவை. மிக நுண்ணிய இரையின் அசைவை கூட உணரக் கூடியவை.

வளையை தோண்ட மிக வலிமையான கால்கள் உள்ளது.

வளை வாசலிலேயே மம்மு!

இதுதான் அடிமர கண்ணி கதவு சிலந்தி. அடிமரத்தில் வசிக்கும். தன் வளையின் முன் கண்ணி கதவு அமைத்து இரையை தந்திரமாக பிடிப்பதால், 'இவ்ளோ' நீட்டு பெயர். இந்த சிலந்திக்கு தன் மிக வலிமையான தாடை எலும்பால் பாதுகாப்பான வளை தோண்டுவதோடு, அந்த வளையின் முன் இரைக்கான கண்ணி கதவையும் ஏற்படுத்திவிடும். இங்கே படத்தில் பாருங்கள். பொறி கதவை! பார்க்க முடியாதபடி மறைந்து பொறி கதவை பார்த்தபடி சிலந்தி காத்திருக்கும். பொறி கதவருகே வரும் இரையை ஊர்ந்து சென்று பிடிக்கும்.

தாவிக்கொண்டே அளப்பேன்

வேட்டைக்கார சிலந்திகளுக்கு நல்ல கண் பார்வை வேண்டும். அப்போதுதானே தன் இரையை தேடி, துரத்தி பிடிக்க முடியும். இதன் கண் பார்வை எந்த அளவு துல்லியமாக இருக்கு மென்றால் இந்த சிலந்தி ஒடி கொண்டே இரையை தாவும் தொலைவையும் கிரகித்து விடும்.

ரெடி ஸ்டார்ட் கோ கேட்ச்!

ஓநாய் சிலந்தி பகலில் வேட்டையாடும். இதோ இது ஆஸ்திரேலிய ஓநாய் சிலந்தி. தன் இரையை கண்டவுடன் மிக விரைவாக ஓடி பிடிக்க, தன் பட்டு இழைகளால் அமைக்கப்பட்ட வளையின் முன் காத்திருக்கிறது.

சாப்பிடணும்னா துப்பு!

துப்பும், உமிழும் சிலந்திகள் பசிக்கும்போது உமிழும். இரையை பார்த்தவுடன் தன் ஒவ்வொரு பல்லிலிருந்தும் அருவியாய் உமிழும். இது இரை மேல் பசை போல் ஒட்டி சிலந்தி வந்து இரையை பிடிக்கும் வரை தப்ப விடாமல் செய்து விடுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us