PUBLISHED ON : செப் 14, 2018

அ நிறம் | அளவு
தேவையானப் பொருட்கள்:
வெற்றிலை - இரண்டு
துளசி இலை - 25
கற்பூரவல்லி இலை - ஆறு
கோதுமை மாவு - 1 கப்
பம்பாய் ரவை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க.
செய்முறை:
வெற்றிலை, துளசி இலை, கற்பூரவல்லி இலை மூன்றையும் அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, பம்பாய் ரவை, உப்பு போட்டு கலக்கவும். இதில், வடிகட்டிய சாறை விட்டு பிசையவும். தேவைப்பட்டால், தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பூரி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். பின், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, பூரி போல் இட்டு, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால், 'ஹெர்பல் பூரி' தயார்!
ஜலதோஷம், இருமலை தடுக்கும் .
- அம்பிகா சஞ்சீவ், சென்னை.
