sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாவீரன் அலெக்ஸாண்டர்!

மாவீரன் அலெக்ஸாண்டர்!

மாவீரன் அலெக்ஸாண்டர்!


PUBLISHED ON : ஜூலை 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 13, 2012


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: அடங்காப்பிடாரி குதிரையை அடக்க முடியாமல் பெரிய வீரர்கள் திணறினர். ஆனால் சிவனான அலெக்ஸாண்டர் அதன் அருகில் சென்றார். இனி-

அதன் கண்களில் பயம் தெரிந்தது. தன் நிழலைக் கண்டு அந்தக் குதிரை மிரள்வதை அலெக்ஸாண்டர் புரிந்துக் கொண்டான்.

குதிரையின் கடிவாளத்தை மெல்லப் பற்றி, அதன் நிழல் விழாத பக்கமாகத் திருப்பி நிறுத்தினான். குதிரையின் பிடரியை மிருதுவாகத் தடவி, தட்டிக் கொடுத்தான். குதிரை மெல்ல சிலிர்த்து அடங்கியது. பிறகு அமைதியாக இருந்தது. இதுதான் சமயம் என்று அலெக்ஸாண்டர் அதன் முதுகில் தாவி அமர்ந்தான். குதிரை இப்போது மிரண்டு திமிரவில்லை. அலெக்ஸாண்டர் வாசித்த மகுடிக்கு அடங்கிய பாம்பானது.

அலெக்ஸாண்டர் விரும்பியபடியெல்லாம் சவாரி சென்றது. மைதானத்தைச் சுற்றி சுற்றி வந்தது. நடுநடுவே நாட்டியம் ஆடியது.

சுற்றியிருந்தவர்களுக்கோ ஒரே ஆச்சரியம். டோட்டல் சரண்டர். குதிரை இப்போது முழுக்க முழுக்க அலெக்ஸாண்டர் கட்டுப்பாட்டில்! அப்போது ஆனதுதான் இருவருக்குமான அறிமுகம். அலெக்ஸாண்டரின் பன்னிரெண்டாம் வயதில் தொடங்கிய அந்த நட்பு கிட்டத்தட்ட இருபத்தியோரு ஆண்டுகள் தொடர்ந்தன. அலெக்ஸாண்டரின் அந்த நண்பன் மிகச் சிறந்தவன்; விசுவாசம் நிறைந்தவன்.

அலெக்ஸாண்டரின் அத்தனை போர்க் களங்களிலும் ப்யூஸ் பாலஸ் தான் அலெக்ஸின் ஜோடி. அதன் மீது அமர்ந்து தான் அலெக்ஸாண்டர் வேட்டைக்குச் செல்வான். கி.மு.326ல் அலெக்ஸாண்டர் இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்தான். பழைய பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற போரின் போது ப்யூஸ் பாலஸுக்குக் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு சீக்கிரமே அது செத்துப் போனது.

அலெக்ஸாண்டர் தானே முன்னின்று தன் குதிரையின் இறுதி ஊர்வலத்தை நடத்தினான். ப்யூஸ் பாலஸை சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்தான். தன் அருமைத் தோழனின் நினைவாக ஒரு நகரத்தையே அலெக்ஸாண்டர் உருவாக்கினான். அந்த நகரத்துக்கு, 'ப்யூஸ்பலா' என்று பெயரிட்டான்.

விடலைப் பருவத்தில் இருந்தாலும், தனது வீரத்தை நிரூபிக்கும் சோதனைகளில் அலெக்ஸாண்டர் தேர்ச்சி பெற்றுவிட்டான். ஒரு வீரன் என்ற முறையிலும், இளவரசன் என்ற முறையிலும், தான் பெற வேண்டிய திறமைகளைக் கடுமையாக முயன்று பெற்றான்.

அலெக்ஸாண்டர் எப்படிப்பட்ட ஆள்?

அழகானவன்; ஆம்பிளைசிங்கம். இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய அவனது உருவச் சிலைகளைக்கூட அவனது துணிச்சலையும், மன உறுதியையும் உணர்த்தும் வகையில்தான் கிரேக்க சிற்பிகள் வடிவமைத்துள்ளனர். அவனது முகத்தில் சிறிதளவும் சலனம் தெரியாது. நடுத்தர உயரம். ஆனால், கட்டுமஸ்தான உடல்வாகு. இறுகிய தோள்கள், கைகளில் நரம்பு புடைத்திருக்க, ஒரு சிறந்த போர்வீரனுக்குரிய உடலமைப்பு கொஞ்சம் கூட மாறாமல் இருக்கும்.

அலெக்ஸாண்டரின் துணிச்சலும், வீரமும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவன் வேட்டையாடுவதிலும், குதிரை சவாரியிலும் பலவிதமான நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தான். வாள் வீச்சு, ஈட்டியெறிதல், வில்வித்தை என்று பல போர்க்கலைகளிலும் அவன் சிறந்து விளங்கினான்.

அலெக்ஸாண்டர் பேரறிவாளன்; தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவன். அலெக்ஸாண்டருக்கு ஏழு வயது இருக்கும். பெர்சியாவைச் சேர்ந்த தூதுக்குழு ஒன்று மாசிடோனியா அரசவைக்கு வந்தது. அப்போது மன்னர் பிலிப் அங்கு இல்லை. பெர்சியாவுக்கும், கிரேக்க நாடுகளுக்கும் அவ்வளவு இணக்கமான உறவு அப்போது இல்லை. ரொம்ப நாளாகவே இந்த நிலைமை.

அந்த தூதுக்குழுவிடம் அலெக்ஸாண்டர் ஆர்வத்துடன் அடுக்கடுக்காகப் பல கேள்வி களைக் கேட்டான். பதில் சொல்வதற்கு அந்த தூதுக்குழுவில் இருந்த அறிஞர்கள் ரொம்பவே திணறிப் போய்விட்டனர். அலெக்ஸாண்டர் இந்தக் கேள்விகளை சும்மா கேட்கவில்லை . அவனது நோக்கமே வேறு... இந்த கேள்விகளின் மூலம் கிடைத்த பதில்கள், பிற்காலத்தில் அவனது படையெடுப்புகளின் போது சிறந்த பலனைக் கொடுத்தது.

மத நம்பிக்கை, இறையறிவு, மூட நம்பிக்கை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தன் தாய் ஒலிம்பியஸிடம் இருந்தே பெற்றிருந்தான். சில மூட விஷயங்களை தன் தந்தை பிலிப்பிடம் இருந்து கற்றுக் கொண்டான். கிரேக்க நாட்டு அரச பரம்பரையினர் பலரும் டெல்பி கோயிலுக்குச் செல்வதுண்டு. டெல்பி கோயிலில் ஒருவரது எதிர்காலம் பற்றி குறி சொல்வர். கிட்டத்தட்ட நம்மவூர் ஜோசியம் அல்லது ஜாதகம் பார்ப்பதுபோல... கோயில்களில் சில பூசாரிகள், 'சாமி' வந்து குறி சொல்வார்களே. அதேதான்.

அலெக்ஸாண்டருக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் நம்பிக்கை ஜாஸ்தி. தன்னுடைய எதிர்காலம் பற்றி அறிந்து கொள்வதில் அவனுக்கு ரொம்பவே ஆர்வம். டெல்பி கோயிலில் ஒரு பெண் சாமியார் இருந்தார். அந்தப் பெண் சாமியார் ஒருமுறை அலெக்ஸாண்டரைப் பார்த்து, 'இளைஞனே, நீ வெல்ல முடியாதவன்' என்றாள். அலெக்ஸாண்டரின் எதிர்காலம் அதை உண்மை என நிரூபித்தது.

கி.மு.340ல் பிலிப் மன்னர் பைஸான்சியம், பெரிந்தஸ் ஆகிய கிரேக்க நகரங்களின் மீது படையெடுத்து சென்றார். அங்கு போர் நடந்து கொண்டிருந்தபோது மாசிடோனியாவின் ஆட்சி நிர்வாகப் பொறுப்பை அலெக்ஸாண்டரிடம் ஒப்படைத்திருந்தார். அப்போது அலெக்ஸாண்டருக்கு வயது வெறும் பதினாறு. பெல்லா அரண்மனையில் இருந்தபடி நாட்டு நிர்வாகத்தை சிறப்பாக கவனித்துக் கொண்டு இருந்தான் அலெக்ஸாண்டர்.

அலெக்ஸாண்டரின் திறமையின் மேல் நம்பிக்கை வைத்திருந்ததால், மாசிடோனியாவை சிறிது மறந்து விட்டு, அடுத்தடுத்த நாடுகளை பிடிப்பதில் மும்முரமானார் மன்னர் பிலிப். தொடர்ந்து போர்... மாசிடோனி யாவை சுற்றி இருந்த சின்னச் சின்ன நாடுகளையெல்லாம் தோற்கடித்து, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் பிலிப். கி.மு.339 மன்னர் பிலிப்பின் ஆட்சிக்காலத்தில் மிக முக்கியமான கட்டம். படை ரீதியாக வலுவான கிரேக்க நாடான ஏதென்ஸ்க்கும், மாசிடோனியாவுக்கும் இடையே போர் மூண்டது. ஏதென்ஸ்க்கு ஆதரவாக தீப்ஸ் நாடும் சேர்ந்து பிலிப்பின் படையுடன் மோதியதால், சண்டையில் சூடு பிடித்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்த தீவிரமான யுத்தத்தின் முடிவில் ஏதென்ஸ் மற்றும் தீப்ஸ் படையினரை மன்னர் பிலிப் தோற்கடித்தார். அந்தப் போரில் அலெக்ஸாண்டரின் பங்கும் இருந்தது. தந்தைக்கு ஈடுகொடுக்கும் விதமாக, அவனது கட்டுப்பாட்டில் இருந்த மாசிடோனிய குதிரைப்படை அலெக்ஸாண்டரின் வியூகப்படி எதிரிகளைத் துவம்சம் செய்துவிட்டது.

இந்த மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு கிரேக்கத்தின் நிகரற்ற தலைவன் என்ற அந்தஸ்து பிலிப்புக்கு கிடைத்தது. எதிர்த்து முனகுவதற்குக் கூட எதிரிகள் தயாராக இல்லை.

இதில் பிலிப்புக்கு ரொம்பவே பெருமிதம். அலெக்ஸாண்டரைப் பற்றி கிரேக்க மக்களிடையே பிலிப் பேசும் போதெல்லாம், 'இதோ உங்கள் வருங்கால ஆட்சியாளன்' என்றுதான் பெருமையுடன் சொல்வார். பிலிப் தனது சாம்ராஜ்ஜியத்தை விரித்துக் கொண்டிருந்தபோது, மாசிடோனியாவை கவனித்துக் கொண்ட அலெக்ஸாண்டருக்கு இருப்பு கொள்ளவில்லை. தானும் ஏதாவது சாதிக்க வேண்டும். முழுக்க முழுக்க எனது சாதனையாகவே அது இருக்க வேண்டும் என்பதுதான்.

அப்பா பிடித்து வரும் நாடுகளை கவனித்துக் கொள்வதில் அலெக்ஸாண்டருக்கு எந்த திரில்லும் கிடைக்கவில்லை. அவனது மனம் முழுவதும் சண்டை மோகம். அதை செயல்படுத்தத் திட்டம் தீட்டப்பட்டது. சூட்டோடு சூடாக தனக்கென தனிப்படையை உருவாக்கினான். பார்த்துப் பார்த்து சேர்த்த வீரர்கள் கூட்டம். எல்லாருக்கும் யுத்தவெறி. படை ரெடி... அடுத்தது என்ன? போரைத் தொடங்குவதுதானே. கிளம்பியது அலெக்ஸாண்டர் படை. மாசிடோனியாவுக்குக் கிழக்கே திரேஸியன் மேடி என்ற நாடு. நேரே அங்கு சென்று நின்றது அலெக்ஸாண்டர் படை.'சண்டைக்கு வா...' என்று மேடி அரசனுக்கு சவால்விட்ட அலெக்ஸாண்டரைப் பார்த்து, அந்த அரசனுக்கு முதலில் சிரிப்புதான் வந்தது.

'இது என்ன சிறுபிள்ளைத்தனமாக இருக்கு. என்னோட சண்டை போட வந்திருப்பது ஒரு பொடியனா!' என்று நினைத்தான் அந்த அரசன். 'சிறுவனே அப்படியே திரும்பிப்பார்க்காமல் தப்பித்து ஓடி பிழைத்துக் கொள்!' என்று அலட்சியப் படுத்தினான் அரசன்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us