தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹேய்... நெருப்பு அரக்கனா நீ!

ஹேய்... நெருப்பு அரக்கனா நீ!

ஹேய்... நெருப்பு அரக்கனா நீ!


PUBLISHED ON : மார் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹவாய் தீவு... எரிமலைகளின் பூமி. இன்றும், அங்கு, ஐந்து எரிமலைகள் கக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பிரம்மாண்டமானது, 'கிலாவ்லா' எரிமலை.

ஜனவரி 3, 1983ல் துவங்கி, இன்று வரை விடாமல் நெருப்பையும், சாம்பலையும் கக்கிக் கொண்டேயிருக்கிறது. ஒன்று, அதன் மைய வாயிலிருந்து கக்கும் அல்லது பல வெடிப்பு களை கொண்டு பக்க வாட்டில் பரவியுள்ள இடங்களிலிருந்து கக்கும்.

கடல் மட்டத்திலிருந்து, 1,277 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த எரிமலை, பொதுவாக, ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்பட்டாலும், 2,500 ஆண்டுகளாக அறியப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, 1790ல் இருந்து இதுபற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

இது, 1820ல் பிரபலமானது. நடுவில் விட்டு விட்டு கக்கினாலும், 1983லிருந்து தொடர்ந்து நெருப்பை கக்கி வருவது வேதனையளிக்கிறது.

இது, ஹவாய் நெருப்பு தேவதை பீலேயின் ஆக்ரோஷம், என்பது, இந்த பகுதி மலை வாழ்மக்களின் நம்பிக்கை.

எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பு, லாவா ஏரி, தென் மேற்கே மற்றும் வடக்கே என இரு பிரிவாக சென்று கடலில் கலக்கின்றன. இதன் தாக்கத்தை, 100 சதுர கிலோ மீட்டர் துாரத்திற்கு காணலாம்.

திடீர் கக்கலால், 214 வீடுகள் நாசமாகியுள்ளன. ஹைவேயில், 14 கிலோ மீட்டர் துாரத்திற்கு இதன் சாம்பலை, 35 மீட்டர் கனத்திற்கு இன்றும் காணலாம். இந்த எரிமலைக்கு, 'கால்டிரா' என்ற செல்லப் பெயரும் உண்டு. இதன் பொருள், 'வேகமாக பரவிக் கொண்டே யிருப்பது' என்பது.

ஹவாய் தீவில் காண வேண்டிய காட்சிகளில் இதுவும் ஒன்று!

- திலிப்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us