PUBLISHED ON : ஆக 01, 2014

எகிப்தியக் கழுகு, பசு மற்றும் வெள்ளாட்டின் சாணத்தை தனது பெண் இனத்தைக் கவரும் பொருட்டு உண்ணும். இந்த சாணத்தில் 'கரோடினாய்டு' என்னும் நிறம் கொடுக்கும் சத்து உள்ளது.
இந்த 'கரோடினாய்டு' என்னும் சக்தியை தானாகவே உற்பத்தி செய்ய முடியாது. இந்த 'கரோடினாய்டு' சத்துள்ள உணவை மட்டுமல்லாது கழுகின் கண்களைச் சுற்றியுள்ள மஞ்சள் நிறமான பாகத்தை பளிச்சென வைத்திருக்க உதவுகிறது. கழுகானது முக்கியமான 'ப்யாஸெஸ்' என்கிற பொருளை உண்பதினால் அதனுடைய முகம் மஞ்சள் நிறமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.
மிகவும் சக்திவாய்ந்த பறவையின் முகமானது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது பெண் பறவையைக் கவர்ந்திழுக்க உதவுகிறது. ஸ்பெயினிலுள்ள 'ஜெராக்ஸ் மிருகக் காட்சி'யில் ஆராய்ச்சியாளர்கள், மாட்டின் சாணத்தை நான்கு பறவைகளுக்கு பத்து நாட்களுக்கு உணவாகக் கொடுத்தனர்.
அப்போது எல்லாப் பறவைகளின் ரத்தத்திலும் 'கரோடினாய்டு' என்னும் சத்து நிறைய இருந்தது. அது மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் நாட்களை விட சாணத்தை உண்பதனால் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தது.
ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் எகிப்தியக் கழுகு மிகவும் பரவலாக இருக்கிறது. இதற்கு 'சாணம் தின்னி' என்ற பட்டப்பெயரும் உண்டு.
