PUBLISHED ON : ஆக 01, 2014

* நாம் தயிர் உறைய வைக்கும் போது சீக்கிரமாக உறைய வேண்டும் என்றால் சின்ன சின்ன கிண்ணத்தில் ஊற்றி வைத்தால் சீக்கிரம் உறைந்து தயிராக மாறிவிடும்.
* பிரிட்ஜ் இல்லாதவர்கள், பால் காய்ச்சியதும் அதன் மேல் மெல்லிய துணியை கட்டி மூடி வைத்தால் காலையில் காய்ச்சிய பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.
* தலையில் எண்ணெய் தேய்க்கும் போது வைரக் கம்மல்களை அணியக்கூடாது. வைரத்தில் எண்ணெய் படுவது மிகவும் கேடு.
* கழுத்தில் அணிந்திருக்கும் மஞ்சள் சரடு அழுக்கடைந்து விட்டால் சலவை சோடாவை சிறிது பஞ்சில் எடுத்து சுடுநீரில் நனைத்து சரடை நன்கு உருவித் துடைத்துக் கழுவினால் பளிச் சென்றிருக்கும்.
* கல் பதித்த நகைகளில் உள்ள எண்ணெயை எடுக்க, சாக்பீசை தண்ணீரில் நனைத்து அதன் மீது தேய்த்துச் சிறிது நேரம் சென்றதும் நீர் விட்டு அலசினால் எண்ணெய் போய்க் கற்கள் 'பளபள'வென்று மின்னும்.
ஹலோ எங்க போறீங்க? சாக்பீஸ் வாங்கதானே?
