PUBLISHED ON : ஆக 01, 2014

அ நிறம் | அளவு
* அயர்ன் செய்யும் போது முதலில் குறைந்த வெப்பத்தில் அயர்ன் செய்யும் துணிகளைத் தேய்த்து, பிறகு அதிக வெப்பம் வேண்டிய ஆடைகளை அயர்ன் செய்தால் மின் செலவு குறைவாகும்.
* அயர்ன் பாக்ஸிற்கு 'த்ரீ பின் பிளக்'தான் முழுமையான பாதுகாப்பு.
* துணிகளைத் தேய்த்த பிறகு அயர்ன் பாக்ஸை மூலையில் சூடு ஆறும் வரை நிமிர்த்தி வைக்க வேண்டும்.
* 'ஹீட்டிங் எலிமென்டை' வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும்.
* அயர்ன் பாக்ஸின் அடிப்பாகத்தில் பழுப்பு நிறமான கறை இருந்தால் சோடா மாவை ஈரத்துணியில் தொட்டுக் கறையின் மீது தேய்த்தால் கறை போய்விடும். இல்லையென்றால், அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதியில் எண்ணெய் தடவி நிமிர்த்தி வைத்து 'ஆன்' செய்து சிறிது நேரத்திற்கு பின் 'ஆப்' செய்து ஈரத்துணியால் துடைத்தாலும் கறை போய்விடும்.
