தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டேய்... நில்லுடா!

டேய்... நில்லுடா!

டேய்... நில்லுடா!


PUBLISHED ON : செப் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்கள் ஊரில் உள்ள, இருபாலரும் படிக்கும் பள்ளியில், 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பாசிரியர் மிகவும் கண்டிப்பானவர்; காலையில் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால், கடுமையான தண்டனை கொடுப்பார்.

இதற்கு பயந்து, மாணவியர் அனைவரும் சரியான நேரத்திற்கு வந்து விடுவோம். மாணவர்களில் சிலர், அவ்வப்போது தாமதமாக வருவர். அதில், ஒரு மாணவன் மட்டும், தினமும் தாமதமாகவே வருவான். ஆசிரியர் தரும் தண்டனையையும் ஏற்றுக் கொள்வான்.

ஒருநாள், அவன் பத்து மணிக்கு வகுப்பறைக்குள் நுழைந்த போது, 'டேய் நில்லுடா தினமும் லேட்டா வர்றியே... உன்னை கேட்க ஆளில்லைன்னு நினைச்சுட்டியா?' என்று கோபத்தோடு அவனை நெருங்கினார்.

அவனோ, அமைதியாக தலை குனிந்து நின்றான்.

'நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். உனக்கு அவ்வளவு திமிரா?' என்றவாறு கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இதைக் கண்ட மாணவர்களில் ஒருவன், 'சார்! அவன் காலையில பக்கத்து ஊர் வரைக்கும் போய், பேப்பர் போட்டுட்டு வருவான் சார்...' என்றதும் பின் வாங்கினார் சார்.

அடி வாங்கி கண் கலங்கியவாறு, 'சார் எனக்கு அப்பா இல்லை; எங்கம்மா காய்கறி விக்கிறாங்க. நான் காலையில பேப்பர் போட்டுட்டு, அதற்கு பின் அம்மாவுக்கு தேவையான காய்கறிகளை சந்தையில் வாங்கி குடுத்துட்டு வர, தினமும் லேட்டாகி விடுகிறது. என்னால் உங்களுக்கு பிரச்னைனா சொல்லுங்க; நான் இனிமே ஸ்கூலுக்கே வரல...' என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதான்.

உடனே, ஆசிரியர் அவனை கட்டியணைத்து, 'உன் குடும்ப கஷ்டத்துக்காக வேலையும் செய்துவிட்டு பள்ளிக்கு வர்றியே... இதுவே பெரிய விஷயம். நான் அடிச்சதை மனசில வச்சுக்காதே. நல்லா படி!' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.

என்னோடு படித்த அந்த மாணவன், இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில், 'வி.ஏ.ஓ.,'வாக பணிபுரிவதாக கேள்விப்பட்டு, பெருமை அடைகிறேன்!

- பி.சிவகாமி, எஸ்.பெருமாள்பட்டி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us