PUBLISHED ON : மே 27, 2016

சென்னையிலுள்ள புகழ்பெற்ற கோ - எட் ஆங்கிலப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறேன். எங்கள் வகுப்பிற்கு புது மாணவி ஒருத்தி வந்தாள். சேலத்தில் படித்த மாணவி. கிராமத்து ஸ்டைலில் இருந்தாள். இது போதாதா எங்களுக்கு?
'ஹேய் ... வில்லேஜ் பேரட்... இங்கிலீஷ் தெரியுமா உனக்கு? டிரெஸ்சிங் ஸ்டைல மாத்து... முகத்த பார்த்தாலே, 'ஆவ்'னு தூக்கம் வருது?' என ஆங்கிலத்தில் கிண்டல் செய்தேன்.
'இந்த 'கன்ட்ரி ப்ரூட்' கிட்ட தமிழ்ல பேசு மச்சான்... கிராமத்து கிளிக்கு இங்கிலீஷ் புரியாதுடா!' என்றான் நண்பன்.
'கரெக்டுடா மச்சான்!' என்று சொல்லி வாயை மூடுவதற்குள், 'லிமிட் யுவர் அக்ளி டங்... டோன்ட் யு ஹாவ் சென்ஸ் அட் ஆல்!' (வாயை மூடுங்கள். அறிவில்ல.. உங்களுக்கு) என்று அழகிய ஆக்சென்டில் சொன்னாளே பார்க்கலாம். அதிர்ச்சி அடைந்த நாங்கள், 'நாட் மச் டு ஸ்பேர் வித் யு!' (அறிவு இருக்கு... ஆனா, உனக்கு கொடுக்கும் அளவிற்கு இல்லை!) என்று சொல்லி சமாளித்து நகர்ந்தோம். எங்க 'கெத்'தை விட்டுக் கொடுக்க முடியுமா?
அப்புறம் பார்த்தா எங்களது வகுப்பின், 'டாப்பர்' அவள்தான். காலப்போக்கில் புரியாத கணக்குகளை சுலபமாக சொல்லிக் கொடுத்து நல்ல தோழியும் ஆனாள்.
உருவத்தைப் பார்த்து யாரையும் எடை போடக்கூடாது என்று மட்டும் தெரிந்து கொண்டோம். நான் சொல்றது சரிதானுங்களே...
- சர்வேஷ், அடையாறு.