தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சைக்கிளை பிடித்து கொண்டு ஓடி...

சைக்கிளை பிடித்து கொண்டு ஓடி...

சைக்கிளை பிடித்து கொண்டு ஓடி...


PUBLISHED ON : மார் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், என் பள்ளி வாழ்வில் நடந்த நிகழ்வு... எங்கள் கிராமத்தில், வசதியான முதலாளிக்கு ஒரு மகன். அவர் தோட்டத்தில், வேலை பார்ப்பவருக்கும் ஒரு மகன். இருவரும் நண்பர்கள்.

முதலாளி, 'ராலே' சைக்கிள் வைத்திருந்தார். அந்த காலத்தில், 'ராலே' சைக்கிள் வைத்திருந்தால், மிகப் பெரிய பணக்காரர் என்பதை, சொல்லாமலே சமூகம் தெரிந்து கொள்ளும்.

முதலாளி மகனை, சைக்கிளில் அமர வைத்து, தொழிலாளி ஓட்டி செல்வார். தன் மகனின் புத்தகப்பையை, சைக்கிளில் வைத்து கொள்வார். அந்த சைக்கிளை பிடித்து கொண்டே தொழிலாளியின் மகன் ஓடி வருவான். மேடான இடத்தில், தந்தைக்கு உதவியாக தள்ளி விடுவான். இப்படி, காலை, 5 கி.மீ., மாலை, 5 கி.மீ., சைக்கிளின் பின், ஓடுவது தொடர் கதையானது.

இருவரும், குறிப்பிட்ட வயதை அடைந்தபோது, ராணுவத்துக்கு ஆள் எடுத்தனர். இருவரும் கலந்து கொண்டனர். ஓட்டம் முதல், அனைத்து உடல் திறன் தேர்வுகளிலும் தொழிலாளி மகன் தேர்வு பெற்று, வேலைக்கு சேர்ந்தார். அவரின் நண்பர் தோல்வி கண்டார். ராணுவத்தில் உயர் பதவி வரை வகித்து, ஓய்வும் பெற்றுவிட்டார்.

இன்று இவர் காரில் போகிறார்; ராலே சைக்கிளில் சென்றவர் நடந்து போகிறார். காலம் எவ்வளவு அனுபவங்களை நமக்கு கற்று தருகிறது. இவர்கள் நட்பு இன்றும் தொடர்வதும், உதவுவதும் உள்ளம் முழுக்க மகிழ்ச்சியை தருகிறது.

- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us