தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ரோஸம்மா டீச்சர் சொல்றத கேளுங்க!

ரோஸம்மா டீச்சர் சொல்றத கேளுங்க!

ரோஸம்மா டீச்சர் சொல்றத கேளுங்க!


PUBLISHED ON : மார் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரையிலுள்ள, புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றுவிட்டேன். என் வகுப்பு மாணவர்களிடம், எப்போதுமே கண்டிப்புடன் இருப்பேன். வீட்டுப்பாடம் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் ஒழுங்கீனமாக நடப்பவர்களை, கையை நீட்ட சொல்லி, ஓரிரு அடிகள் தருவேன்.

ஒருநாள், ஒரு மாணவனை, கையை நீட்ட சொல்லி அடித்தேன். அவனோ வலி தாங்க முடியாமல், கீழே விழுந்தான். அதை தொடர்ந்து, வலிப்பு வர, நான் பதறினேன். அருகிலிருந்த சாவியை கையில் திணித்து, ஒரு வழியாக பழைய நிலைக்கு திருப்பினேன்.

அவனை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அவன் அம்மாவை வரவழைத்து, விஷயத்தை கூறினேன். பேச கூட முடியாத இடைவெளியில், தேம்பி தேம்பி அவன் அம்மா அழ, எனக்கு தர்ம சங்கடமாயிற்று.

சில நிமிடங்களுக்கு பின், 'டீச்சர்... உங்க மேல எந்த தப்புமில்ல; தப்பு என்னோடது தான். அவனுக்கு இந்த பிரச்னை இருப்பதை உங்களிடம் சொல்லியிருக்கணும். அதுக்காக அவன கண்டிக்காம விட்டுறாதீங்க. எப்படியாவது நல்லா படிக்க வச்சிருங்க...' என்று மீண்டும் அழ, எனக்கும் கண்ணீர் வந்தது. அன்று முதல், ஓய்வு பெறும் நாள் வரை யாரையும் அடித்ததில்லை.

தண்டிக்காமல், கண்டித்தே அவர்களை நல்வழிப்படுத்த, பல வழிமுறைகளை கையாண்டு, அதில் வெற்றியும், ஆத்மதிருப்தியும் கண்டேன்.

- எ.ரோஸம்மாள், கண்மாய்கரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us