PUBLISHED ON : ஆக 12, 2011

ஒருமுறை நமது உடலின் உருப்புக்களான வாய், மூக்கு, கண், மூளை, காது ஆகிய ஐந்து பேருக்கும் சண்டை வந்தது.
'நான் இல்லாவிட்டால் மனிதன் மிகவும் கஷ்டப்படுவான்' என்று கூறி ஒன்றோடு ஒன்று சண்டை போட்டன. 'சரி! இதைக் கடவுள்கிட்ட போய் கேட்போம்' என்று முடிவு பண்ணி ஐந்து உறுப்புக்களும் கடவுளைப் போய் பார்த்தன.
''கடவுளே... நான் இல்லைன்னா எவ்ளோ கஷ்டம். என்னோட பேச்சுதானே மற்றவர்களுடன் பழக வைக்குது... நான்தான் கிரேட்!'' என்றது வாய்.
''நான் இல்லன்னா இந்த அழகிய உலகத்தை உங்களால பார்த்து ரசிக்க முடியுமா? நான்தான் கிரேட்!'' என்றது கண்.
''நீங்க பேசுறது, பாட்டு, சத்தம் எல்லாம் கேட்க உதவுனது நான்தானே... நான் இல்லன்னா எப்படி?'' என்றது காது.
''இதை இதை இப்படி இப்படி செய்யுங்கள் என நான் கட்டளை இடலேன்னா... நீங்கள் எல்லாம் வேஸ்ட். அதனால் நான்தான் பெஸ்ட் என்றது மூளை.
மூக்கு மட்டும் ஒண்ணும் பேசாமல் அமைதியாக இருந்தது. இதை கவனித்த கடவுள், ''நீ மட்டும் ஏன் ஒண்ணுமே சொல்லல'' என்று மூக்கிடம் கேட்டாரு. ''தான் ரொம்ப முக்கியம் இல்லை என்பது மூக்குக்கு தெரியும்,'' என்று மற்றவை கிண்டல் செய்தன.
கடவுள் அவைகளை பார்த்து, ''நீங்க எல்லாரும் ஆளுக்கொரு மாதம் செயல்படாமல் இருங்க. எந்த உறுப்பு இயங்காமல் இருக்கும்போது மனிதன் ரொம்ப கஷ்டப்படுறானோ... அந்த உறுப்புதான் பெரிசு,'' என்று கடவுள் சொன்னாரு. எல்லாம் ஒப்புக் கொண்டது.
முதலில் வாய் தன் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் மனிதன் பேச முடியாமல் கஷ்டப்பட்டான். அவனை 'ஊமை'ன்னு சொல்லி மத்தவங்க உதவி செஞ்சாங்க. வாய்தான் பேச முடியலையே தவிர வேறு கஷ்டங்கள் இல்லை. இதே போல் கண், காது, மூளை தன் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் மனிதனுக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் இல்லாமல் இருந்தான்.
கடைசியாக மூக்கு தன் செயல்பாட்டை நிறுத்தியது. அவ்வளவுதான். மனிதன் இறந்தான். காது கண், வாய், மூளை போன்றவை செயல்படவில்லை. அப்போதுதான் மூக்கோட சக்தி மற்றவர் களுக்கு புரிந்தது. அந்த சமயம் கடவுள் அங்கு வந்தார்.
'பார்த்தீர்களா! நீங்கள் எல்லாரும் நாங்கதான் உசத்தி என்று கூறியபோது மூக்கு மட்டும் அமைதியா இருந்தது. மூக்கு இல்லைன்னா நீங்களும் இல்லை. இதை நன்கு தெரிந்தும்கூட மூக்கு தன்னடக்கத்தோட இருக்கு. ஆனால், உங்களுக்கு தன்னடக்கம் இல்லை தன்னடக்கத்தோட இருந்தாதான் எல்லாருடைய பாராட்டையும் பெற முடியும்.எல்லாத்துலேயும் வெற்றி பெற முடியும்,'' என்றார் கடவுள்.
***
