PUBLISHED ON : செப் 19, 2014

கடல் தண்ணீர் என்பது நுண்ணுயிரிகள் எனப்படும் லட்சக்கணக்கான மிக மிகச் சிறிய தாவரங்கள் மற்றும் விலங்குகளை தன்னுள்ளே கொண்டது. பெரும்பான்மையான நுண்ணுயிரிகள் ஒரு மில்லி மீட்டர் நீளத்தை விட குறைவானவையே. ஆனால், இந்த நுண்ணுயிரிகள் இல்லாமல் கடல் தண்ணீரில் உயிர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவைகள் மிக முக்கியமானவைகளாகும். இவை பெரும்பாலான மீன்கள், திமிங்கிலங்கள் மற்றும் பறவைகளுக்கு மிக அத்தியாவசிய உணவாகும். இவைகளின் மிக மிகச் சிறிய தோற்றத்தால், இவைகளால் கடல் நீரில் எதிர்த்து நீந்த முடியாது. அதனால், தண்ணீரால் அலைக்கழிக்கப்படுகின்றன.
பகுதி நேர நுண்ணுயிர்கள்!
சில விலங்குகள் பிறந்தபின் மிக சிறியதாயிருக்கும். ஆனால், வளர வளர மிகப் பெரியதாகிவிடும்.
தாவர நுண்ணுயிரி விலங்கின நுண்ணுயிரியால் உண்ணப்பட அதனை மீன் உண்ண, அதனை பறவை உண்கிறது.
சூரிய அன்பர்கள்!
மற்ற தாவரங்களை போலவே தான் இவைகளும். உணவிற்கு சூரிய ஒளி தேவை.
எண்ணற்ற கோப்போட்கள்!
கோப்போட்கள் தான் கடலில் மிக எளிதாய் காண கிடைக்கும் விலங்கினமாகும்.
எல்லோருக்கும் உணவு!
நுண்ணுயிரிகளை சிறிய மீன்களும், ஷெல்மீன்களும் உண்ணும். அவைகளை பறவைகள், கடல் ஆமைகள் மற்றும் சீல்கள் உண்ணும். நுண்ணுயிரிகள் மட்டும் இல்லை என்றால் மற்றவைகள் பட்டினியால் வாடத்தான் வேண்டும்.
ஒரு பக்கெட்டில்!
கோப்போட்கள் என்பது ஒரு வகையான விலங்கின நுண்ணுயிராகும். அவைகளின் மிக நுண்ணிய தோற்றத்தால் இந்த பக்கெட்டில் பத்து லட்சம் கோப்போட்களை நிரப்பலாம்.
கலரில் நுண்ணுயிர்கள்!
தடிவர நுண்ணுயிரிகள் அதிகப் படியான வெளிச்சம் கிடைக்கும் கடல் தண்ணீரின் மேல் மட்டத்தில் வாழும். அதோடு அவை அதிக மினரல்கள் இருக்கும் குளிர்ந்த நீரினை விரும்பும். இவை அதிகம் இருக்கும் இடங்களிலேயே இவைகளை உண்ணும் விலங்கின நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. இந்த உலக வரைப்படம் தாவர- விலங்கின நுண்ணுயிர்கள் வாழ்வதை காட்டுகிறது. சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை பகுதிகளில் நீல, பர்பிள் மற்றும் பிங்க் பகுதிகளை விட அதிகப்படியான நுண்ணுயிர்கள் காணப்படும். பழுப்பு நிறப்பகுதிகள் இன்னமும் கணக்கிடப்படவில்லை.
