தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நெல்சன் மண்டேலா! (3)

நெல்சன் மண்டேலா! (3)

நெல்சன் மண்டேலா! (3)


PUBLISHED ON : செப் 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெள்ளையரின் நிறவேற்றுமைச் சட்டங்களை எதிர்த்து மண்டேலா கறுப்பின மக்களைத் திரட்டினார். 'வெள்ளையர்க்கு மட்டுமே' என்று அறிவிப்பு இருந்த பூங்காக்களில் கறுப்பின மக்களைத் துணிவுடன் அமரச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் கறுப்பரினப் போராட்டங்களைத் தொடர்ந்த நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். ஆனாலும், அவர் பிணையத்தில் வெளியே வந்து போராட்டங்களை நடத்தி வந்தார்.

வெள்ளையர்கள் தூக்கித் திரிந்த துப்பாக்கிகளுக்கு வேலையில்லாமல் செய்து விட தமது போராட்ட முறைகளை, அன்பு வழிப் போராட்டங்களில் வழி நடத்திச் சென்றார். நிற வேற்றுமைக்கு எதிரான போராட்டங்களுக்கு கடுமையான தண்டனை கள் அளிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

ஆயினும் அவற்றையெல்லாம் எதிர்ப்பதையே தனது சுவாச மூச்சாகக் கருதி, நெல்சன் மண்டேலா தொடர்ந்து பல ஆண்டுகள் போராடி வந்தார். இதனால், வெள்ளையர்களின் சிம்ம சொப்பனமானார்.

கடந்த 1956ல் டிசம்பரில் ஒரு விடிகாலைப் பொழுதில் ரத்தவெறி கொண்ட வெள்ளையர்களால் கறுப்பர் இனத்தலைவர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். மண்டேலாவின் முதல் மனைவி ஈவிலின் மண்டேலாவுடன் முரண்பட்டு அவரது தாய் வீட்டுக்கு தனது பிள்ளைகளுடன் சென்று விட்டார்.

மண்டேலா மீதான வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தலைமறைவாக வாழ்ந்து போராட்டத்தை தூண்டிவந்து கொண்டிருந்தார். 'வின்னி நோம் சானோ இம்டிகி ஜீலா' என்ற சமூகப் பணிப் பெண்ணுடன் இக்காலத்தில் மண்டேலா தொடர்பு வைத்திருந்தார்.

மண்டேலா என்றேனும் தூக்கு தண்டனைக் கைதி என்று அறிந்திருந்த போதிலும் அவரை மன ஒப்புதலுடன் மணந்து கொண்டார் வின்னி. மண்டேலா பொதுமக்களிடையே தூண்டிவிட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களில் வன்முறை தலை தூக்கியது. துப்பாக்கி குண்டு மழை பொழிந்தது. கேப்டவுன் மக்களை ரத்தக் களரியாக்கியது. மனித உரிமை புதைகுழிக்குச் சென்றது.

மண்டேலா கைது செய்யப்படுவதும், வழக்குகள் நடத்தப்படுவதுமாக இருந்தது.

'போராட்டமே என் வாழ்க்கை. போராட்டக் களங்களே என் வாழ்க்கையின் உயிர் மூச்சு உலாவரும் பூமி. என் இறுதி மூச்சு முடிகிற வரையில் சுதந்திரத்துக்காகவும், மக்களாட்சிக்காகவும் என்னை இழந்து கொண்டிருப்பேன்!' என்று முழங்கினார் மண்டேலா.

மண்டேலா சிறைக்குள்ளிருந்தாலும் ஊற்றுகள் பொங்கிப் பெருகி கிணற்றிலிருந்து வெள்ளம் வழிவதைப் போல் நாட்டில் போராட்டங்கள் தொடர்ந்து கிளர்ந்தெழுந்தன. பல ஆண்டுகள் நெல்சன் மண்டேலாவின் பெயர் உயர்த்திப் பிடிக்கப்பட்டது.

'நாட்டை விட்டு வெளியேற ஒப்புக் கொண்டால் மண்டேலா சிறையை விட்டு விடுதலை செய்யப்படுவார்' என்று பலமுறை கோரிக்கை வைத்தும் மறுத்து விட்டார் மண்டேலா.

உலகின் மூலை முடுக்கில் எல்லாம் மண்டேலாவின் பெயரை உச்சரிக்கத் துவங்கின. பலமுறை மண்டேலாவின் விடுதலை அறிவிக்கப்பட்டு அவர் சிறையிலிருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

'என்னுடைய அருமை மக்களின் பிறப்புரிமையான சுதந்திரத்தை விற்றுவிட நான் தயாராக இல்லை. எமது மக்கள் துயருறும்போது, எத்தகைய ஒப்பந்தத்திற்கும் நான் தலை வணங்கி வெளியே வர விரும்பவில்லை' என மறுத்து விட்டார்.

உலகம் முழுவதும் பல உயர்ந்த விருதுகளை அவருக்கு அன்றாடம் வழங்கிய வண்ணம் இருந்தது. இருபத்தேழு ஆண்டு கால சிறைவாசக் கொடுமைக்கு பின் 1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி நிறவெறிக் கொடுமையை எதிர்த்த அந்த சிம்மகர்ஜனை வெளியே வந்தது.

தம்முடைய விடுதலைக்காக குரல் எழுப்பிய நாடுகளுக்கெல்லாம் சென்று நன்றி செலுத்தினார். கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை வரவேற்று புகழாரம் சூட்டியது. நெல்சன் மண்டேலாவின் விடுதலை வெள்ளையரிடமும், கறுப்பரிடமும் புதிய நம்பிக்கைகளை விதைத்தது என்பதை உலகமே ஒப்புக் கொண்டது.

-முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us