தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பை வெச்சிருக்கேன்!

பை வெச்சிருக்கேன்!

பை வெச்சிருக்கேன்!


PUBLISHED ON : ஜூன் 13, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தப் பறவைக்கு ஆக்கிரமிக்கும் பார்வையும், கொடுமையான வளைந்த அலகும் உண்டு. இது தொடர்ந்து வேட்டையாடுகிற திறமை கொண்டது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரை தப்பிச் செல்ல முயன்றால், அந்த இரையால் தப்பவே முடியாது. திரும்பியோ அல்லது முறுக்கினாலும் அது தப்ப முடியாது. அத்தனை பொல்லாத பறவை. சுழற்காற்றை எதிர்த்துச் செல்லும் சில பறவைகளில் இதுவும் ஒன்று. இதனுடைய உணவானது புதிதாகக் குஞ்சு பொரிக்கப்பட்ட கடல் ஆமைகள், மீன்கள், சிறிய பறவைகள் ஆகும்.

இப்பறவை தன்னுடைய கூடுகளை மரத்தில் கட்டும். ஆண் பறவை, பெண் பறவையைக் கவர்வதற்காக தன் தொண்டைப் பகுதியில் உள்ள சிவப்புப் பையை விரிவடைந்த பலூனைப் போல் காட்டும். இவை பார்ப்பதற்கு சிவந்த பழுத்த பழங்களைப் போல் இருக்கும்.

'பிரிகேட்' பறவைகள் மிகவும் இலகுவாக மனிதர்களோடு பழகும். இதை மிகவும் சுலபமாக பழக்க முடியும். தீவுகளுக்கிடையில் செய்திகளை அனுப்ப இவைகளுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன.

இவ்வகைப் பறவைகள் மிக உஷ்ணமான அமெரிக்கப் பகுதியிலும், வெப்பமான கடற்கரைப் பகுதிகளின் அருகிலும் வசிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us