PUBLISHED ON : பிப் 01, 2013

அ நிறம் | அளவு
பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டி ருந்தபோது, திடீரென கனமழை பெய்தது. கூட்டம் மழையைப் பொருட்படுத்தாமல், அவரது உரையைக்கேட்டது. அப்போது நேருவுக்கு ஒருவர் குடைபிடித்தார். இதனை விரும்பாத நேரு , ''மக்கள் நனையும்போது, எனக்கு மட்டும் குடை எதற்கு?'' என மெல்லிய குரலில், குடையை மறுத்தார். ஆனால், நேருவின் மீதுள்ள அன்பால், தொடர்ந்து குடைபிடித்துக் கொண்டிருந்தார். உடனே நேரு உரத்த குரலில், ''இவர் குடையைத் தொடர்ந்து பிடிப்பதைப் பார்த்தால், 'மைக்'க்கு சொந்தக்காரரோ எனத் தோன்றுகிறது. அது நனையாமல் இருக்க வேண்டியே குடையைப் பிடிக்கிறார்,'' எனக் கூறி அனைவரையும் நகைச்சுவை மழையிலும் நனைய வைத்தார்.
