தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஐ சப்போஸ்...

ஐ சப்போஸ்...

ஐ சப்போஸ்...


PUBLISHED ON : ஏப் 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 1964ல், மதுரை மாவட்டம், திருமங்கலம், பி.கே.என்., மேனிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியர் ஜெயராஜ், மாணவர்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வார். ஆங்கில பாடம் நடத்தும் போது, 'சப்போஸ்' என்ற வார்த்தையை அடிக்கடி, உபயோகிப்பார்.

சில மாணவர்கள் சேர்ந்து, ஒரு திட்டம் போட்டோம். ' ஆசிரியர் கூறும், 'சப்போஸ்' என்ற வார்த்தையை எண்ணுவது; ஆயிரமாவது முறை சொல்லும் போது, சர்ப்ரைசா அவருக்கு, சாக்லெட் கொடுத்து விபரம் கூறலாம்' என்று முடிவானது.

அதன்படி, ஒவ்வொருமுறை, 'சப்போஸ்' சொல்லும் போதும், எங்களது கண்கள் சந்தித்துக் கொள்ளும். நோட்டில், குறித்துக் கொள்வோம்.

மிக குறுகிய காலத்தில், ஆயிரத்தை நெருங்கி வந்தது.

'நாளை எப்படியும், ஆயிரத்தை தொட்டு விடுவார்' என்று, சாக்லெட் வாங்கி, தயாரானோம். வகுப்பு ஆரம்பமானது, எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். வகுப்பு முடிய, பத்து நிமிடங்கள் இருந்தன.

ஆயிரமாவது, 'சப்போஸ்' அவர் வாயிலிருந்து வர, நாங்கள் எழுந்து, கை தட்டி, ஆசிரியரிடம் விபரம் கூறி, சாக்லெட் வழங்கினோம். அவரும், அகம் மகிழ்ந்து அதை பெற்று, உதிர்த்த வார்த்தை, 'ஐ சப்போஸ்...' வகுப்பில், ஆரவாரம் அடங்க, நெடுநேரம் ஆயிற்று.

இப்போது, 65 வயதை கடந்து விட்டேன். ஆசிரியர், மாணவர் உறவு அன்யோன்யமாய் எல்லை மீறாதிருந்தது அன்று... இன்று, ஆசிரியரை கொலை செய்யும் நிகழ்வுகளை பார்க்கும்போது மனம் அழுகிறது!

- த.கண்ணன், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us