தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அறியாமை!

அறியாமை!

அறியாமை!


PUBLISHED ON : ஜூலை 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில், 2001ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!

அன்று அரையாண்டு ஆங்கிலத் தேர்வு நடந்தது. அதே அறையில், 9ம் வகுப்பு மாணவர்களும் தேர்வுக்கு தயாராக அமர்ந்திருந்தனர். அறை கண்காணிப்பாளராக இருந்த எங்கள் வகுப்பாசிரியர் ராஜாமணி, இரு பிரிவினருக்கும் தனித்தனியே வினாத்தாள்களை வழங்கினார்.

முன்வரிசையில் நண்பன் சம்பத்குமார், தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தான். ஒரு மணி நேரம் கடந்திருந்தது. அவன் அருகே இருந்தவன், 'உன்னிடம் இருப்பது, 9ம் வகுப்பு வினாத்தாள் போல் உள்ளதே...' என சந்தேகம் எழுப்பியுள்ளான்.

இதையடுத்து, தவறான வினாத்தாளை வைத்திருந்ததை உணர்ந்த நண்பன், விபரத்தை ஆசிரியரிடம் தெரிவித்தான். அதை பகிரங்கப்படுத்தியதால் அனைவரும் சிரித்தோம். தவறை எண்ணி வருந்தி மன்னிப்பு கேட்டான். பின், உரிய வினாத்தாளை பெற்று எழுதினான்.

என் வயது, 33; தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். ஏ.டி.எம். இயந்திரம் பழுது நீக்கும் சேவைப் பணி செய்து வருகிறான் அந்த நண்பன். அவனை சந்திக்கும் போதெல்லாம் வகுப்பறையில் நடந்த நிகழ்வை நினைவூட்டி சிரித்து மகிழ்கிறேன்.

- பி.பொன் இளவரசன், சிவகாசி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us