PUBLISHED ON : ஜூலை 13, 2018

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
இளநீர் - 1 கப்
சர்க்கரை - 1.5 கப்
இளநீர் வழுக்கை துண்டுகள் - 0.5 கப்
தேங்காய் பால் - 2 கப்.
செய்முறை:
பச்சரிசியை, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய் பால், இளநீருடன் தண்ணீர் கலந்து, நான்கு கப் வரும் வகையில் எடுத்து, அதில் பச்சரிசியை வேக வைக்கவும். வெந்த கலவையை நன்றாக மசிக்கவும்.
இதனுடன், சர்க்கரையை கலக்கவும்; பின், பொடியாக நறுக்கிய, இளநீர் வழுக்கை துண்டுகளை, கலவை மீது பரப்பி பரிமாறவும்; சுவையான இளநீர் பொங்கல் தயார். சத்துக்கள் நிறைந்தது. குழந்தைகளின் உடல் சூட்டை தணிக்கும்.
- ப.ஜெயந்தி, கோவை.
