தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (121)

இளஸ்... மனஸ்... (121)

இளஸ்... மனஸ்... (121)


PUBLISHED ON : ஜூலை 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு ஜெனி ஆன்டிக்கு, 10ம் வகுப்பு மாணவி எழுதுவது. ஒரே மகள்; அப்பா, அரசு ஊழியர்; அம்மா தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கவலை இல்லாமல் வாழலாம்; எங்கள் அம்மா மாத்திரம் ஒத்துழைத்தால் போதும். என் பெரிப்பா அரசியல்வாதி; அவர்களுக்கு எந்த வழியில் பணம் வந்தாலும், ஓ.கே., ஆனால், என் அப்பா நேர் வழியை விரும்புபவர்.

பெரிப்பா வீட்டில், என்ன வாங்கினாலும், அதை விட, 'பெஸ்ட்'டா எங்க வீட்ல வாங்கணும். இது எங்கம்மாவின் கொள்கை. எப்ப பார்த்தாலும், அவங்க வீடு, பிள்ளைங்க என்ன வாங்குறாங்க, போடுறாங்க என பாத்து பாத்து, எங்கப்பா உயிரை எடுப்பது தான் அம்மாவின் வேலை.

'நீங்க இப்படி இருந்தா முன்னேறின மாதிரி தான்...' என புலம்புவது... எதிலும் திருப்தியில்லாமல் இருப்பது... இதனால, என் அப்பா, மன நிம்மதி இழந்து தவிக்கிறார். இதெல்லாம் எனக்கு பிடிக்கல.

இருவர் சம்பாதிப்பதில் சந்தோஷமா சிரிச்சு, சாப்பிட்டு வாழ்வதையே விரும்புறேன். இதனால், என் படிப்பு கெட்டு போகுது. என் டாடியோட மனசு, கஷ்டப்படுறத என்னால சகிக்க முடியல...

'உங்கம்மா படுத்துற கொடுமையை சகித்து, உனக்காகத்தான் உயிரோடு இருக்கேன்...'னு அவர் சொல்லும் போது, எனக்கு எப்படி இருக்கும் ஆன்டி... தயவு செய்து அம்மா என்கிற பணப் பேய்க்கு, மனசுல உறைக்கிற மாதிரி, 'அட்வைஸ்' கொடுங்க ஆன்டி..

ஓ மை காட்... என்ன கொடுமை சகோதரி... நீங்க பெத்த மகள் உங்களுக்கு, 'அட்வைஸ்' சொல்ல சொல்கிறாள்... அந்த அளவிற்கு அவள் மனம் புண்படும்படி விட்டுள்ளீர்கள்.

எப்பவும், மற்றவர்களுடன் உங்கள் வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள். மற்றவர்களுடைய அதிர்ஷ்டத்தில், நீங்கள் மூக்கை நுழைக்காதீர்கள். அது, உங்களுக்கே தீங்காக முடிந்து விடும். உங்களுக்கென கடவுள் எதை வைத்திருக்கிறாரோ, அது உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். அதை விட்டு விட்டு, மற்றவர்களை பார்த்துக் கொண்டே ஓடினால், உங்களுக்கென கடவுள் வைத்திருப்பதையும் இழந்து விடுவீர்கள்.

உங்கள் கணவர் நேர் வழியில் செல்லும் போது, அதை தடுத்து, அவரை அநியாயம் செய்யத் தூண்டுவது எந்த விதத்தில் நியாயம்...

அரசியல்வாதிகளின் செழிப்பை பார்த்து ஆசை படலாமா... துன்மார்க்கன் செழிப்பதே அவன் அழிவுக்காகத்தான் என்பதை மறந்துடாதீங்க... நாளைக்கே மாட்டிக் கொண்டால், தலையில் முக்காடை போட்டுக் கொண்டு, ஜெயிலுக்கு போவர்... அந்த வாழ்க்கை வேணுமா உங்களுக்கு.

ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு, கல்லுாரி மாணவியரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லுாரி பேராசிரியை, நிர்மலா தேவியின் இன்றைய நிலையைப் பாருங்க... இதெல்லாம் நமக்கு தேவையா...

நேர்மையாக, கிடைத்த பணத்தில், சந்தோஷமா சாப்பிட்டு, மகள், கணவருடன் பேசி சிரித்து, இன்பமாக வாழும் வாழ்க்கை தான் என்றுமே நல்லது சகோதரி. ஒவ்வொரு நாளும், யாருக்கு என்ன தீமை வரும் என்பதை சொல்லவே முடியல. அவ்வளவு பொல்லாத காலங்களாக உள்ளது...

ஒருநாளை சந்தோஷமா முடித்தாலே போதும் என்ற நிலையில் வாழ்கிறோம். எனவே, இந்த ஒப்பிடுதல் வேலையை தூக்கி போட்டு விட்டு, உங்கள் கணவர், மகளுடன் சந்தோஷமாக வாழ ஆரம்பியுங்கள். எத்தனையோ பேருக்கு குழந்தை இல்லை, நல்ல கணவர் இல்லை, வேலை, வீடு இல்லை... குடித்து விட்டு அடித்து நொறுக்கும் கணவருடனும், பிள்ளைகளுக்காக வாழ்கின்றனர் அநேக பெண்கள். நீங்கள் என்னடான்னா கடவுள் கொடுத்த வரம் போன்ற வாழ்க்கையை காலில் போட்டு மிதிக்கிறீர்கள்.

உங்களுக்கு நேர்மையான கணவர், திருப்தியான மனமுடைய மகள், வேலை, வீடு என, எல்லாமே கொடுத்துள்ள கடவுளுக்கு, நன்றி சொல்லி, சந்தோஷமான, திருப்தியான ஒரு புது வாழ்க்கையை ஆரம்பியுங்கள்! நொந்து போயிருக்கும் கணவரையும், உங்கள் அன்பு மகளையும் அணைத்து, ஆறுதல் படுத்துங்கள். 'இனி நான் புதியவள்!' என சொல்லுங்கள்.

இனிய இல்லறம் அமைய வாழ்த்துகள்!

- அன்புடன், ஜெனிபர் பிரேம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us