தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... - 167

இளஸ்... மனஸ்... - 167

இளஸ்... மனஸ்... - 167


PUBLISHED ON : அக் 15, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா...



என் வயது, 40; குடும்பத் தலைவியாக உள்ளேன். சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிகிறார் கணவர். மூத்த மகனுக்கு வயது, 16; பார்க்க வெடவெடன்னு ஒல்லியாக இருப்பான். காதோரங்களில் சம்மர் கிராப் செய்து, நடுவில் முடி வைத்திருப்பான். அதில், செயற்கை சாயம் பூசியிருப்பான்; சிறப்பாக, 'கானா' பாடுவான்.

அதிவேக, 'ஹோன்டா டியோ' பைக்கில் சுற்றி வருவான். சிவப்பு, பச்சை நிறங்களில், டைட் பென்ட்டும், பூ போட்ட சட்டையும் விரும்பி அணிவான்; கால்களில், வண்ணமயமான கேன்வாஸ் மாட்டியிருப்பான். சாயங்காலம் ஆகி விட்டால், இதுபோல் காணப்படும் பையன்களுடன் ஊர் சுற்றுவான்.

'என்னடா இப்படி எல்லாம் செய்ற...' என்று கேட்டால், 'நான் புள்ளிங்கோ...' என கூறி, 'கும்பலாக சுத்துவோம்... ஐயோ, அம்மான்னு கத்துவோம்...' என்று பாடுகிறான்.

இவன் எதிர்காலத்தை நினைத்தால், பயமாக இருக்கிறது. இவனை திருத்த என்ன செய்யலாம் அம்மா. நல்ல வழி சொல்லுங்கள்.



இப்படிக்கு,

பா.தேவி.


அன்பு சகோதரிக்கு...



தமிழில் உச்சரிக்கப்படும், 'புள்ளிங்கோ' அல்லது, 'புல்லைங்கோ' என்பது, கொச்சையான வார்த்தை. இதற்கு, நண்பன் என பொருள். வட சென்னை பகுதியில், புள்ளிங்கோ என்ற கூட்டம், 2019ல் உருவானது. அதை உருவாக்கியது, கானா பாடகர் ஸ்டீபன் பாடிய பாடல். அந்த பாடல், ஏழு மாதங்களில், 5 கோடி பார்வையாளர்களை சென்றடைந்தது. அது தான், புள்ளிங்கோ என்ற, 'டிரன்ட்' உருவாக காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

பெரும்பாலும், 'தல' என அழைக்கப்படும் நடிகர் அஜித் ரசிகர்களாக இவர்கள் இருப்பர். எப்போதும் கும்பலாக சுற்றுவர். ஹிந்தி, உருது, தெலுங்கு கலந்த ஒருவித மொழியில் கலாய்த்து கொள்வர்.

குறிக்கோள் எதுவும் வைத்துக் கொள்ள கூடாது என்ற எண்ணம் உடையவர்கள். அடிக்கடி, இரண்டு சக்கர வாகன ரேஸ் வைத்து, வெறித்தனமாக பறப்பர்.

பொதுவாக, தலைக்கு எண்ணெய் தேய்க்க மாட்டார்கள். இவர்களின் தலை, பான்பராக் துப்பின மாதிரி காட்சியளிக்கும். தெருவில் இவர்களைப் பார்த்தால், நாய் பயந்தோடும்... அல்லது வினோத ஜந்து என எண்ணி குரைக்கும்.

மக்கள் கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

பேருந்து மீது ஏறி ஆடுவர்; ரயிலில் தொங்கி செல்வர்.

இவர்களை பற்றி கெட்ட விதமாய் ஆயிரம் கூறினாலும், பொதுவாக கெட்ட பழக்கங்கள் அதிகம் இல்லாதவர்கள்.

உன் மகனிடம் கீழ்க்கண்ட விஷயங்களை கவனி.

* ஒழுங்காக பள்ளிக்கு செல்கிறானா, படிக்கிறானா என பார்

* பைக் ரேஸ் போகாமல் இருக்கச் சொல்; பேருந்தின் உச்சியில் நிற்பதோ, ரயிலில் தொங்கியபடி போவதோ, ஆபத்தானது என அறிவுரை கூறவும்.

உன் கணவரை வேறு ஒரு ஊருக்கு மாற்றல் வாங்க சொல்; செல்லும் புது இடத்தில் மாணவர்களின் நடை, உடை, பாவனை பேச்சுக்களைப் பார்த்து, உன் மகனும் மாறி விடுவான்.

குறிக்கோள் இல்லாத மனிதன், விலங்குக்கு சமம் என்பதை அவனுக்கு உணர்த்து. புள்ளிங்கோவின் நல்ல அம்சங்களை ஸ்வீகரித்து, மற்றவற்றை துாக்கி எறியச் சொல்.

நல்ல மனநல ஆலோசகரிடம் அழைத்து செல்; நான்கைந்து அமர்வுகளில், மனநல ஆலோசகர் உன் மகனை, புள்ளிங்கோ மாயையிலிருந்து வெளியே கொண்டு வந்து விடுவார்.

டீன் ஏஜ் கோமாளி தனங்களை, உன் மகன் தலை மூழ்கி, புதிய சாதனை அத்தியாயத்தை எழுத துவங்க வாழ்த்துகள்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us