தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்...! (119)

இளஸ்... மனஸ்...! (119)

இளஸ்... மனஸ்...! (119)


PUBLISHED ON : ஜூன் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, பிளஸ் 2 படிக்கும் மாணவி எழுதிக் கொண்டது. உங்களிடம், எந்த பிரச்னைக்கு பதில் கேட்டாலும், சிம்பிளா, ஸ்வீட்டா, கொஞ்சி கொஞ்சி பதில் சொல்லுவீங்க... அது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆன்டி. என்னோட பிரச்னைக்கும் ஒரு பதிலை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் ஆன்டி...

எனக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் இரண்டிலும் நிறைய வேர்க்குது ஆன்டி; இதனால, நண்பர்கள் எனக்கு கை கொடுக்கவே மாட்டாங்க. நான் எழுதும் காகிதம் எல்லாம் நனைந்து, கைகள் அழுக்காகி, கசகசன்னு இருக்கும். அதை விட கொடுமை, கால் பாதங்களில் அதிகம் வேர்ப்பதால், பரீட்சை ஹாலில் செருப்பு போட்டு செல்ல அனுமதியில்லை.

ஆனா, என்னோட கால் பாதம், வியர்வையால் நனைந்து, அப்படியே கால் தடம் பதிந்திருக்கும்; அந்த அளவிற்கு வேர்க்குது ஆன்டி... இதனால, காலில் அழுக்கு ஏற்பட்டு, பார்க்கவே எரிச்சலா வருது; தயவுசெய்து, ஒரு வழி சொல்லுங்க ஆன்டி...

ஹையோடா... சின்ன வயசுல, நான் டாக்டர் ஆகணும்ன்னு ஆசைப்பட்டது என்னவோ உண்மை தான், அதுக்காக, எல்லாரும் என்ன டாக்டராகவே ஆக்கிடுவீங்க போலிருக்கே... அவங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வி எல்லாம், என்கிட்ட கேட்கிறீங்களே... இது நியாயமா...

இருந்தாலும் சொல்றேன்... இங்க பாரும்மா... முதலில், வியர்வை ஏன் வியர்க்கிறது என்பதை தெரிஞ்சுக்கோ... உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி, உடலை தேவையான அளவு குளிர்ச்சியா வைக்கிறது; அதிகம் பதட்டமாக இருக்கும் போதும், தைராய்ட் பிரச்னை உள்ளவர்களுக்கும் அதிகமாக வியர்க்கும். வியர்ப்பது மிகவும் நல்லது; வியர்வை அதிகம் வெளியேறினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; கொழுப்பு கரைவதால், உடல் எடை குறையும்.

உடற்பயிற்சி, வாக்கிங் செல்லும் போது, இதயம் நன்கு ரத்தத்தை அழுத்துவதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது நிறைய வியர்வை வெளியேறும்; இதனால், சருமத்தில் உள்ளே உள்ள அழுக்குகள் வெளியேறி, சருமம் பொலிவு பெறும்.

நம்மில் பலர், உடலை வியர்க்கவே விடுவதில்லை; உடனே, 'பேன்' போட்டுக் கொள்கிறோம்; வியர்ப்பது மிக மிக நல்லது. ஒரு சிலருக்கு, உள்ளங்கை, உள்ளங் கால்களில் வியர்வை சுரப்பிகள் அதிகமாக இருக்கும். அதனால், அந்த இடங்களில் உனக்கு அதிகம் சுரக்கிறது.

நான் சொல்ற காரியங்களை, தொடர்ந்து செய்து வந்தாலே போதும்; அதிகப்படியான வியர்வை பிரச்னையிலிருந்து விடை பெறலாம். உடலை, குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, தினமும் இருவேளை குளி; கைகளை, குளிர்ந்த நீரால் அடிக்கடி கழுவுவதால், அதிகப்படியான வியர்வை சுரப்பது குறையும்.

அடிக்கடி மோர் குடி; வெறும் வயிற்றில், இளநீர் குடி; தனியாவை கொதிக்க வைத்து, 50 மில்லி கஷாயம் போல் செய்து, தினமும் குடித்து வர, அதிகப்படியாக வியர்ப்பது நின்று போகும்.

காய்ந்த திராட்சை, துளசி, இரண்டையும் தனித்தனியாக சுடு தண்ணீரில் ஊற வைத்து, பத்து நிமிடத்திற்குப் பின் எடுத்து, இடித்து, இரண்டிலுமிருந்து, 1 தேக்கரண்டி சாறை எடுத்து ஒன்றாக கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், அதிகமாக வியர்ப்பது குறையும்; நெஞ்சு படபடப்பு பிரச்னை இருந்தாலும் போய் விடும்.

- சரியா... இப்ப ஹேப்பி தானே செல்லம்...

- அன்புடன், ஜெனிபர் பிரேம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us